தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மாணவர்கள் விபூதி பொட்டு வைக்க தடை - அரசு பள்ளி அதிரடி - பாஜவினர் வாக்கு வாதம்

மாணவர்கள் விபூதி பொட்டு வைக்க தடை - அரசு பள்ளி அதிரடி - பாஜவினர் வாக்கு வாதம்

Feb 22, 2023, 02:06 PM IST

google News
பாஜக கட்சியினர் இன்று தலைமை ஆசிரியை நேரில் சந்தித்து இது குறித்து விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பாஜக கட்சியினர் இன்று தலைமை ஆசிரியை நேரில் சந்தித்து இது குறித்து விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பாஜக கட்சியினர் இன்று தலைமை ஆசிரியை நேரில் சந்தித்து இது குறித்து விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒட்டன்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களை பொட்டு. விபூதி வைக்க கூடாது என்று தலைமை ஆசிரியை கூறியதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் பாஜகவினர் அரசு பள்ளி ஆசிரியருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அரசு கே. ஆர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி இயங்கி வருகிது. இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளி மாணவ மாணவியரிடையே யாரும் நெற்றியில் பொட்டோ. விபூதியோ வைத்து வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டதால் மாணவ மாணவியரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதுகுறித்து மாணவ மாணவியர் அவர்களது பெற்றோர்களிடம் தெரிவித்ததால் கிராமப் பகுதியில் உள்ள பொதுமக்களும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து பாஜக கட்சியினர் இன்று தலைமை ஆசிரியை நேரில் சந்தித்து இது குறித்து விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இது அரசு ஆணையாக வெளியிட்டுள்ளது என்று கூறியுள்ளார். இந்நிலையில் அவர்கள் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி