தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Srilanka Refugees: மேலும் 8 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வருகை!

Srilanka refugees: மேலும் 8 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வருகை!

Manigandan K T HT Tamil

Mar 28, 2023, 02:58 PM IST

Tamilnadu: மேலும் போலீசார் அவர்களை தனுஷ்கோடி காவல் நிலையத்தில் இருந்து மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு மேல்விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
Tamilnadu: மேலும் போலீசார் அவர்களை தனுஷ்கோடி காவல் நிலையத்தில் இருந்து மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு மேல்விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

Tamilnadu: மேலும் போலீசார் அவர்களை தனுஷ்கோடி காவல் நிலையத்தில் இருந்து மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு மேல்விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்குள்ள இலங்கை தமிழர்கள் வாழ வழியின்றி தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Arrest: ‘சவுக்கு சங்கர் கைது! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!’ ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

’காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயகுமார் தன்சிங் கொலைக்கு போலீஸ்தான் காரணம்!’ ஆதாரத்தை அடுக்கும் அன்புமணி ராமதாஸ்!

Jayakumar Dhanasingh: ‘நெல்லை காங்கிரஸ் பிரமூகர் எரித்துக் கொலையா?’ விளாசும் ஈபிஎஸ்! சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை

Congress: ’காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணத்திற்கு நான் காரணமா?’ ரூபி மனோகரன் எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி!

இந்நிலையில் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள 3ம் மணல் திட்டில் இலங்கையில் இருந்து அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் இன்று 8 பேர் வந்து தஞ்சம் அடைந்துள்ளனர்.

அவர்களை மீட்ட மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை தலைமன்னாரிலிருந்து 1.45 லட்சம் ரூபாய் இலங்கை பணம் கொடுத்து கள்ளப் படகு மூலம் நேற்று இரவு 10:30 மணியளவில் தனுஷ்கோடி மூன்றாம் திட்டு பகுதிக்கு 8 பேர் அகதிகளாக வந்திறங்கி உள்ளனர். ஹெவர்கிராப்ட் கப்பலில் சென்று மீட்டு இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் அவர்களை மரைன் போலீசாரிடம் இன்று ஒப்படைத்துள்ளனர்.

தற்போது மரைன் போலீசார் தனுஷ்கோடி காவல் நிலையத்தில் வைத்து முதற்கட்ட விசாரணையில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த சசிகுமார், உமாதேவி,யோவிகா, துவாரகா,மகேந்திரன் பார்வதி, கம்சிகா, இலவன் ஆகிய 8 பேரும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து தனுஷ்கோடி வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

மேலும் போலீசார் அவர்களை தனுஷ்கோடி காவல் நிலையத்தில் இருந்து மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு மேல்விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். 

விசாரணைக்கு பின் அவர்கள் மண்டபம் இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாபிக்ஸ்