Spurious Liquor : கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு!
May 14, 2023, 06:49 PM IST
மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்திய மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் பகுதியில் நேற்று ஏராளமானோர் கள்ளச்சாராயம் அருந்தி இருக்கிறார்கள். இதில் 16 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. கள்ளச்சாராயம் அருந்திய 6 பேர் மயக்கமடைந்த நிலையில் நேற்றிரவு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எக்கியார் குப்பத்திற்கு விரைந்த போலீசார் பாதிக்கப்பட்ட மேலும் 10 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். மேலும், முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கள்ளச்சாரயம் அருந்தி 3 பேர் பலியான சம்பவத்தில் கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் மரக்காணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் மதுவை விட கள்ளச்சாராயத்தின் விலை குறைவு என்பதால் இப்பகுதியில் கள்ளச்சாராயம் வாங்கிக் குடிப்போர் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்த வேறு யாரும் இருந்தால் அவர்களே தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில்,கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. 3 பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த ராஜமூர்த்தி என்பவர் உயிரிழந்துள்ளார். அவரை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி மலர்விழி(70) என்பவரும் உயிரிழந்தார்.10க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
கள்ளச்சாராயம், எரிசாராயம் ஆகியவை தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்