தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Sp Warns Thevar Fans: தேவர் குருபூஜைக்கு வரும் செல்பி புள்ளீங்கோளுக்கு வார்னிங்!

SP Warns Thevar Fans: தேவர் குருபூஜைக்கு வரும் செல்பி புள்ளீங்கோளுக்கு வார்னிங்!

I Jayachandran HT Tamil

Oct 26, 2022, 09:18 PM IST

தேவர் குருபூஜைக்கு வருவோர் காவல்துறை வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேவர் குருபூஜைக்கு வருவோர் காவல்துறை வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேவர் குருபூஜைக்கு வருவோர் காவல்துறை வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை: மருதுபாண்டியர் நினைவு நாள் மற்றும் தேவர் ஜெயந்தி விழாக்களுக்கு செல்லும் போது காவல்துறை வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தி சமூகவலைதளங்களில் பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Arrest: ‘சவுக்கு சங்கர் கைது! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!’ ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

’காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயகுமார் தன்சிங் கொலைக்கு போலீஸ்தான் காரணம்!’ ஆதாரத்தை அடுக்கும் அன்புமணி ராமதாஸ்!

Jayakumar Dhanasingh: ‘நெல்லை காங்கிரஸ் பிரமூகர் எரித்துக் கொலையா?’ விளாசும் ஈபிஎஸ்! சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை

Congress: ’காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணத்திற்கு நான் காரணமா?’ ரூபி மனோகரன் எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி!

தேவர் ஜெயந்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது :

கடந்த மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற இமானுவேல் சேகரன் நினைவு நாளின் போது காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறிய வாகனங்கள் கண்காணிப்பு கேமராவின் அடிப்படையில் 25 நான்கு சக்கர வாகனங்கள், 6 இருச்சக்கர வாகனங்கள் என 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தேவர் குருபூஜைக்கு மதுரை மாவட்டத்தில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 100 வாடகை வாகனங்களில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளனர்.

தேவர் ஜெயந்தி மற்றும் மருதுபாண்டியர்கள் நினைவுநாள் விழாவில் கலந்துகொள்ள செல்பவர்கள் மதுபோதையில் அதிவேகமாக வாகனங்களை இயக்கினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநரின் லைசென்ஸ் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும்.

விழாவுக்குச் செல்லும் போது காவல்துறை வாகனங்களை தடுத்து நிறுத்தி இடையூறு செய்து அதனை சமூகவலைதளங்களில் பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

டாபிக்ஸ்