தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Karur Murder : கரூரில் பகீர்.. தந்தையை லாரி ஏற்றிக் கொன்ற மகன்.. சொத்துக்காக நடந்த கொடூரம்!

Karur Murder : கரூரில் பகீர்.. தந்தையை லாரி ஏற்றிக் கொன்ற மகன்.. சொத்துக்காக நடந்த கொடூரம்!

Divya Sekar HT Tamil

Jul 23, 2023, 04:09 PM IST

google News
கரூரில் சொத்துக்காக தந்தையை டேங்கர் லாரி ஏற்றி மகன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் சொத்துக்காக தந்தையை டேங்கர் லாரி ஏற்றி மகன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் சொத்துக்காக தந்தையை டேங்கர் லாரி ஏற்றி மகன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் வெள்ளி யணை அருகே உள்ள கொறவப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (57). இவர் ஹிட்டாச்சி வாகனம் மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்களை வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மேலும் மனைவி இறப்புக்கு பிறகு அதே ஊரைச் சேர்ந்த கணவனை இழந்த வேறொரு பெண்ணுடன் தங்கராஜ் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.

நேற்று அதிகாலை இவர் தனது இரு சக்கர வாகனத்தில் தனது தோட்டத்திலிருந்து வீட்டிற்கு செனறு கொண்டிருந்தார். கொறவப்பட்டி-தம்மநாயக்கன்பட்டி பிரிவு சாலையில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தங்கராஜ் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் விபத்து என கருதி விசாரணை நடத்தி வந்தனர். தகவல் அறிந்து தங்கராஜின் மகன் மோகனசுந்தரம் (30), தனது மனைவியுடன் சென்று தந்தையின் உடலை பெற்றுக் கொண்டு கதறி அழுதார். இந்நிலையில் தங்கராஜின் உறவினர்கள், சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் விபத்து நடந்த பகுதியில் கைபற்றப்பட்ட நம்பர் பிளேட்டை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த நம்பர் பிளேட் டேங்கர் லாரியினுடையது என்பது தெரிய வந்தது. அந்த டேங்கர் லாரி இறந்த தங்கராஜின் மகன் மோகன சுந்தரத்துடையது என்பது தெரிய வந்தது. தந்தை உடல் முன்பு கதறி அழுது நாடகமாடி கொண்டிருந்த மோகன சுந்தரத்தை தனியாக அழைத்து சென்று போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது நான் தான் தந்தையை லாரி ஏற்றிக்கொன்றேன் என தெரிவித்துள்ளார்.

பின்னர் அவர் அளித்த வாக்குமூலத்தில், ”என் தந்தை அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்து இருந்தார். எனக்கு 30 லட்சம் கடன் உள்ளது. இதனை அடைப்பதற்காக சொத்தை எழுதி தர கேட்டேன். ஆனால் அவர் எழுதி தர மாட்டேன் என கூறினார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். ஒரு கட்டத்தில் சொத்து தந்தையின் கள்ளக்காதலிக்கு போய் விடுமோ? என்ற பயம் ஏற்பட்டது.

இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். இதனை தனது மாமா உறவு முறையான மகாசாமி (45) என்பவரிடம் கூறினேன். அதன்படி நேற்று அதிகாலை 5 மணி அளவில் கொறவப்பட்டி-தம்மநாய க்கன்பட்டி பிரிவு சாலையில் மோட்டார் சைக்கிளில் எதிரே வந்து கொண்டிருந்த தந்தை மீது டேங்கர் லாரியை மோத விட்டு கொன்றேன் என கூறியுள்ளார். அவரின் வாக்கு மூலத்தை தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்து, மோகனசு ந்தரம், மகாசாமி இருவரையும் வெள்ளியணை போலீசார் கைது செய்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

vதமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி