தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  உதய்பூர் டெய்லர் படுகொலை: உச்சபட்ச தண்டனை வழங்க சீமான் வலியுறுத்தல்

உதய்பூர் டெய்லர் படுகொலை: உச்சபட்ச தண்டனை வழங்க சீமான் வலியுறுத்தல்

Karthikeyan S HT Tamil

Jun 30, 2022, 06:47 PM IST

google News
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை: உதய்பூரில் கன்ஹையா லால் தேலியைப் படுகொலை செய்திட்ட கொலையாளிகளுக்கு கடும் சட்டத்தின் கீழ் உச்சபட்சத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடைக்காரர் கன்னையா லால் என்பவர் செவ்வாய்க்கிழமை கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார். நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவை ஆதரித்து கருத்து பதிவிட்ட காரணத்திற்காக கன்னையா லால் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்தச் சம்பவத்துக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இதற்கிடையில் படுகொலையில் தொடர்புடைய ரியாஸ் அட்டாரி, கவுஸ் முகமது உட்பட 5 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் உதய்பூரில் கன்ஹையா லால் தேலியைப் படுகொலை செய்திட்ட கொலையாளிகளுக்கு கடும் சட்டத்தின் கீழ் உச்சபட்சத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் தையல்கடை நடத்தி வந்த கன்ஹையா லால் தேலி என்பவரின் தலைதுண்டிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட கோரநிகழ்வு நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கருத்தை மாற்றுக்கருத்தாலும், அவதூறுகளை சட்டவழிமுறைகளாலும்தான் எதிர்கொள்ள வேண்டுமே ஒழிய, வன்முறைத்தாக்குதல்களும், மனிதப்படுகொலைகளும் ஒருபோதும் அதற்குத் தீர்வாகாது. ஒரு உயிரைப் பறித்திடும் கொலைவெறிச்செயலை எதன்பொருட்டும் நியாயப்படுத்த முடியாது. சாதியின் பெயரால் நடக்கும் ஆணவக் கொலைகளையும், மதத்தின் பெயரால் நடக்கும் அடிப்படைவாதக் கொலைகளையும் ஒருநாளும் ஏற்க முடியாது. கன்ஹையா லால் தேலியின் உயிரைப் பறித்திட்ட இக்கொடுஞ்செயலுக்கு எனது வன்மையானக் கண்டனத்தைப் பதிவுசெய்கிறேன்.

அன்பையும், சமத்துவத்தையும், பரிவையும், கருணையையும் போதிக்கும் மார்க்கத்தைத் தழுவிக்கொண்டு, அந்த மார்க்கத்தின் பெயரைச் சொல்லி நடத்துகிற இத்தகையக் கீழான வன்முறைச்செயல்பாடுகளுக்கு அம்மார்க்கமும், அம்மார்க்கத்தைத் தழுவி நிற்கும் பல கோடிக்கணக்கான மக்களும் பொறுப்பேற்க முடியாதென்றாலும், அவர்களை வன்முறையாளர்களாகச் சித்தரித்து, குற்றப்படுத்தி, மதஒதுக்கல் செய்ய முனைகிற இந்துத்துவ வெறியர்களின் தவறான முயற்சிக்கு இப்படுபாதகச்செயல் வலுசேர்க்கும். அடிப்படைவாதச் சிந்தனையாலும், வன்முறைப் பாதையாலும் தனிப்பட்ட இருவர் செய்திட்ட கோரக் கொலையைக் கொண்டு, ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்க முனையும் அரசியல் இலாபக் கணக்கீடுகளை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாதென இச்சமயத்தில் அறுதியிட்டுக்கூறுகிறேன்.

ஆகவே, கன்ஹையா லால் தேலியைப் படுகொலை செய்திட்ட கொலையாளிகளுக்கு கடுஞ்சட்டத்தின் கீழ் உச்சபட்சத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டுமெனவும், இப்படுகொலையை வைத்து சமூகத்தை செங்குத்தாகப் பிளவுப்படுத்த முயலும் மதவாதிகளின் கொடுஞ் செயல்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாதெனவும் நாட்டையாலும் ஆட்சியாளர்களை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்." இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி