Schools Open : தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு வரும் ஜூன் 10 க்கு தள்ளி வைப்பு - பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அறிவிப்பு!
May 31, 2024, 04:23 PM IST
Schools Open: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்ததன் காரணமான ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பள்ளிகள் வரும் ஜூன் 10ம் தேதி திறக்கப்படும் என்ற பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
Schools Open: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்ததன் காரணமான ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பள்ளிகள் வரும் ஜூன் 10ம் தேதி திறக்கப்படும் என்ற பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல்
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் புதுவை மக்களவை தொகுதிக்கும் தேர்தல் நடந்து முடிந்தது. இறுதியாக 7வது கட்ட தேர்தல் வரும் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்பதால், மாணவர்களுக்கு தேவையற்ற பதற்றத்தைக் குறைக்க, அதன் பின் பள்ளிகள் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து வந்தனர்.
ஜூன் 6ல் பள்ளிகள் திறப்பு ரத்து
இதனிடையே ஜூன் 1ஆம் தேதி, வெப்பத்தினாலும் தேர்தல் முடிவுகள் அறிவிப்பின் காரணமாகவும் பள்ளி, கல்லூரிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்காமல், வரும் ஜூன் 10ஆம் தேதி, தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக முன்னதாக தகவல் வெளியாகியது.
ஆனால் கடந்த 24ம் தேதி பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் வரும் ஜூன் 6ம் தேதி தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை தொடங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் அறிவுறுத்தி இருந்தார்.
ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறப்பு
இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கத்தால், பள்ளிகள் திறப்பு ஜுன் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
வரும் 6ம் தேதி திறக்கப்படும் என முன்பு கூறப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தால் 4 நாட்கள் கழித்து திறக்கப்படுகிறது
பள்ளிக்கல்வித்துறையின் புதிய திட்டங்கள்
வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் மூன்று புதிய உத்தரவுகள் நடைமுறைக்கு வர உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. கோடை விடுமுறை காலம் முடிவடைந்த பிறகு வரும் ஜூன் 10ஆம் தேதி அன்று மீண்டும் பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.
பள்ளி வளாகங்களில் கண்காணிப்பு
தமிழ்நாட்டில் போதை பொருட்கள் அதிகம் பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில், பள்ளி மாணவர்கள் மத்தியில் போதை பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன என்பதால் பள்ளி மற்றும் அதனை சுற்றி உள்ள வளாகங்களில் போதை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கான திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை முன்னெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெற்றோர்களை ஒருங்கிணைக்கும் வாட்ஸ் அப் எண்கள்
அடுத்ததாக தமிழகம் முழுவதும் உள்ள ஒரு கோடியே 25 லட்சம் மாணவர்களின் பெற்றோர்களின் செல்போன் எண்களை ஒருங்கிணைத்து வாட்ஸ் அப் மூலமாக மாணவர்களின் தினசரி செயல்பாடுகளை தெரிவிப்பதற்கான ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை முன்னெடுக்க உள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகள் ஜூன் மாதம் பள்ளித்திறப்புக்கு பிறகு துரிதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே இதுவரை பெற்றோர்களின் 70 லட்சம் செல்போன் எண்கள் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில், மீதம் உள்ள செல்போன் எண்களை பள்ளிகள் திறந்ததும் ஒருங்கிணைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
வண்ண கயிறுகளுக்கு தடை
மூன்றாவதாக மாணவர்கள் தங்கள் சமூகத்தின் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் வண்ணக்கயிறுகள் அணிவதற்கும் தடை விதிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக தென் மாவட்டங்களில் மாணவர்கள் தங்கள் சமூக அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் வண்ண கயிறுகளை கட்டுவதால் மோதல்கள் உருவாகிறது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் இதுபோன்ற சாதி மற்றும் மத மோதல்களை தடுக்க ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இக்குழுவின் விசாரணை அறிக்கை தமிழ்நாடு அரசுக்கு சமர்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே பள்ளிகள் திறக்கப்பட்டதும், இந்த மூன்று விவகாரங்களும் உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளி மாணவர்களிடையே வேற்றுமையை ஏற்படுத்தும் வண்ண கயிறுகளை அணிவதற்கு தடை விதிக்கப்படுவதற்கான உத்தரவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்