School Holiday: கனமழை எதிரொலி! பெரம்பலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை!
Jan 09, 2024, 08:34 AM IST
“Schools holiday: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு”
கனமழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த காரைக்கால் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வட தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மேலும் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
நேற்றைய தினம் தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. 5 இடங்களில் அதிகனமழை, 17 இடங்களில் மிக கனமழை, 55 இடங்களில் கனமழையும் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக சீர்காழியில் 23 செ.மீ மழை பதிவாகி இருந்தது.
இன்றைய தினம் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும் பெய்யும்.
தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, தஞ்சை, கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், சென்னை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
டாபிக்ஸ்