தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  School Students : 6-12ம் வகுப்பு மாணவர்களே! காலாண்டு தேர்வு மற்றும் விடுமுறை விவரங்கள்!

School Students : 6-12ம் வகுப்பு மாணவர்களே! காலாண்டு தேர்வு மற்றும் விடுமுறை விவரங்கள்!

Priyadarshini R HT Tamil

Sep 09, 2023, 10:31 AM IST

School Students : தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்களின் தேர்வு அட்டவனையும் வெளியிடப்பட்டுள்ளது.
School Students : தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்களின் தேர்வு அட்டவனையும் வெளியிடப்பட்டுள்ளது.

School Students : தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்களின் தேர்வு அட்டவனையும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் பெலிக்ஸ்க்கு வரும் மே 31 வரை நீதிமன்ற காவல்!’ கோவை நீதிமன்றம் உத்தரவு

Savukku Shankar: ’கை உடைந்த சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு!’ நீதி விசாரணை கேட்கும் அரசியல் செயற்பாட்டாளர்கள் கண்டனம்!

Weather Update: ‘3 மாவட்டங்களில் ரெட் அலார்ட்! 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை’ சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Today Gold Rate : சூப்பர்.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை குறைந்தது.. சவரனுக்கு ரூ.200 சரிவு!

அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான (2023-24) நாட்காட்டியை பள்ளிக்கல்வித் துறை கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியிட்டது. அதில் காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் செப்டம்பர் 3வது வாரத்தில் தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி காலாண்டுத் தேர்வுக்கால அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்களின் தேர்வு அட்டவனையும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு செப்டம்பர் 15 முதல் 27ம் தேதி வரை நடைபெறும். 11ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரையும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும்.

அதேபோல 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 19ம் முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 6, 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 முதல் மதியம் 2.30 மணி வரையும், 9, 10ம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெற உள்ளது.

மேலும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான உடற்கல்வி தேர்வு செப்டம்பர் 22ம் தேதி நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து 28 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்படும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி