TN schools: ஆசிரியர்களுக்கு பயிற்சி.. அரையாண்டு விடுமுறையில் திடீர் மாற்றம்!
Dec 23, 2022, 09:27 PM IST
TN School education department announcement: தொடக்க பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை நாட்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் சார்பான பயிற்சி இருப்பதால் ஜனவரி 4ஆம் தேதி வரை தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு நடைபெற்று வந்த அரையாண்டு தேர்வு மற்றும் இரண்டாம் பருவத் தேர்வுகள் இன்றுடன் முடிவடைந்தன.
இதைத் தொடர்ந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி விடுமுறை முடிந்து 2023ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.
இந்த நிலையில் அரையாண்டு விடுமுறை நாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதன்படி, ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்கள் ஏற்படு செய்யப்பட்டுள்ளது. இதனால் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் துவங்கும். 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தப்படி ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்