Rajinikanth: ரஜினிகாந்த் பெயரில் மோசடி.. பேஸ்புக்கில் பணம் வசூல்..!
Jul 22, 2023, 08:08 AM IST
ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் பேஸ்புக் பக்கம் தொடங்கி மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் உச்சத்தில் இருக்கும் மிகப்பெரிய சினிமா ஸ்டார். ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையின் அறங்காவலர் டி.எஸ்.சிவராமகிருஷ்ணன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகள் ரஜினிகாந்த் பவுண்டேஷன் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு இலவச பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் புகைப்படத்தோடு, எங்கள் அறக்கட்டளை பெயரில் பேஸ்புக் பக்கம் தொடங்கி பரிசு பொருட்களை வழங்கப் போவதாகக் கூறி, எங்கள் அறக்கட்டளையின் பெயரைப் பயன்படுத்தி சிலர் பணம் வசூல் செய்யும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது நடிகர் ரஜினிகாந்த் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. அதேபோல் நல்ல செயல்களில் ஈடுபட்டு வரும் ரஜினிகாந்த் பவுண்டேஷன் அறக்கட்டளைக்கு அவமதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்து வரும் ரஜினிகாந்த், உலக அளவில் அறியப்பட்ட பிரபலமாக உள்ளார். இவரது பெயரில் இவரது ரசிகர்கள் மற்றும் அறக்கட்டளை என அனைவரும் பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
திரைப்பயணம், அரசியல் பயணம் என ரஜினிகாந்த் இன்றுவரை பேசுபொருளாக இருந்து வருகிறார். கோலமாவு கோகிலா இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
அந்த படத்தில் இருந்து அனிருத் இசையில் வெளியான இரண்டு பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றனர். குறிப்பாக காவாலையா பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி மிகப்பெரிய ஹிட் அளித்துள்ளது. இந்த ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து வெளியான ஹூக்கும் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்தில் தென்னிந்தியாவைச் சேர்ந்த பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர் என்பது சுவாரசியமான விஷயமாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: