savukku shankar: கார் வாங்க காசு இப்படிதான் வந்தது! போட்டு உடைத்த சவுக்கு!
Feb 23, 2023, 01:18 PM IST
’’போலீஸ்தான் எல்லோரிடமும் மாமுல் வாங்குவார்கள், நான் போலீஸ்காரிடமே மாமூல் வாங்கினேன்’’
அரசியல் விமர்சகரும் பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர். எனது நண்பர்கள் வீட்டில் நடந்த நிகழ்வு என எழுதி வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் TN12AV7989 என்ற எண் கொண்ட ஹூண்டாய் வென்யூ 1.5 க்ரீட் ரக காரில் வந்து இறங்கும் சவுக்கு சங்கர், நண்பர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடி இருந்தார். சங்கர் பெயரில் இருக்கும் ஹூண்டாய் கார், கடந்த ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறைக்கு சென்று வந்த ஒரு மாதத்திலேயே சவுக்கு சங்கர் கார் வாங்கியது எப்படி என விமர்சனம் செய்து அவரது எதிர்ப்பாளர்கள் கேள்விகளை எழுப்பி இருந்தனர்.
சவுக்கு சங்கர் காரின் சிறம்பம்சங்கள்
சவுக்கு சங்கர் வாங்கி இருக்கும் ஹூண்டாய் வென்யூ ரக காரின் சிறப்பம்சங்களை தற்போது பார்க்கலாம். ஹூண்டாய் வென்யூ ரக கார்களில் டாப் எண்ட் மாடலாக டீசலில் ஓடும் Hyundai Venue Top SX (O) வகை கார்கள் உள்ளது. 3.99 மீட்டர் நீளமும் 1.77 மீட்டர் அகலமும் 1.6 உயரமும் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த கார் 2.5 மீட்டர் வீல் பேஸையும் 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்கையும் கொண்டுள்ளது. 1493 சிசி திறனில் இயங்கும் இந்த கார் ஆனது லிட்டருக்கு 23.4 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் என கூறப்படுகிறது.
மேன்னுவல் ட்ரான்ஸ்மிஷன் முறையில் 6 கியர்களை கொண்டு BS 6 விதிமுறைகளை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரில் 5 பேர் வரை பயணம் செய்ய முடியும். காரில் சேர்க்கப்படும் வசதிகளை பொறுத்து இந்த காரின் விலை 14 லட்சம் வரை விற்கப்பட்டு வருகிறது.
கார் வாங்க காசு வந்தது எப்படி?
இந்த நிலையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு சவுக்கு சங்கர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனக்கு கார் வாங்க எங்கிருந்து பணம் வந்தது என்பது குறித்து மனம் திறந்துள்ளார். அதில், எனக்கு ஆயிரம் நண்பர்கள் உள்ளார்கள், எப்போது திமுக அரசுக்கு எதிராக பேசத் தொடங்கினேனோ அப்போது முதலே என்னை பைக்கில் போக வேண்டாம் என எனது நண்பர்கள் அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டனர். கோயம்பேடு முதல் மதுரவாயில் வரை செல்லும் சாலையில் பைக்கில் செல்லும் போது பின் இருந்து தள்ளிவிட வாய்ப்புள்ளது.
மேலும் காலையில் வாக்கிங்க் செல்வதையும் காவல்துறை அதிகாரி ஒருவர் நிறுத்த சொல்லிவிட்டார். போலீஸ்தான் எல்லோரிடமும் மாமுல் வாங்குவார்கள், நான் போலீஸ்காரிடமே மாமூல் வாங்கினேன், காவல்துறை அதிகாரிகள், நண்பர்கள் ஆகியோரிடம் க்ரவுட் ஃபண்டிங்க் மூலம் நிதி திரட்டி கார் வாங்கினேன்.
’’ரெட் ஜெயண்ட்டை நோக்கியும் கேள்வி எழுப்புங்கள்’’
நான் எப்படி கார் வாங்கினேன் என்ற கேள்வியை மக்கள் எழுப்ப வேண்டும் என்று நானும் விரும்புகிறேன், இதே கேள்விகளை ரெட்ஜெயண்ட் நிறுவனம் பெயரில் ரேஞ்ச் ரோவரும், மெர்சிடிஸ் பென்சும், 14 கோடி ரூபாய் மதிப்பில் வாட்சும் எப்படி வந்தது என கேட்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 31 ஆண்டு அரசு பணியாளராக இருந்துள்ளேன், பணியில் இருந்த போது எனக்கு நண்பர்கள் உதவி செய்திருந்தால் நான் வாங்கி இருந்திருக்கமாட்டேன் எனவும் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்