தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Nirmala Sitharaman: ’நிதியமைச்சர் முன் வங்கியை லெப்ட் ரைட் வாங்கிய வியாபாரி!’ கோவையில் பரபரப்பு!

Nirmala Sitharaman: ’நிதியமைச்சர் முன் வங்கியை லெப்ட் ரைட் வாங்கிய வியாபாரி!’ கோவையில் பரபரப்பு!

Kathiravan V HT Tamil

Oct 03, 2023, 04:21 PM IST

google News
”நீங்கள் சொல்வது உண்மை என்றால் எனக்கு எப்போது கடன் தருவீர்கள் என சொல்லுங்கள். கடனை மறுக்கிறீர்கள் என்றால் ஏன் கடனை மறுத்தீர்கள் என்று சொல்லுங்கள்”
”நீங்கள் சொல்வது உண்மை என்றால் எனக்கு எப்போது கடன் தருவீர்கள் என சொல்லுங்கள். கடனை மறுக்கிறீர்கள் என்றால் ஏன் கடனை மறுத்தீர்கள் என்று சொல்லுங்கள்”

”நீங்கள் சொல்வது உண்மை என்றால் எனக்கு எப்போது கடன் தருவீர்கள் என சொல்லுங்கள். கடனை மறுக்கிறீர்கள் என்றால் ஏன் கடனை மறுத்தீர்கள் என்று சொல்லுங்கள்”

கோவையில் நடைபெற்ற 90 ஆயிரம் பேருக்கு 3,479 கோடி ரூபாய் வங்கிக்கடன் வழங்கும் விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கினார். ந்த நிகழ்ச்சியில் தொழில்முனைவோர் ஒருவர் தனக்கு வங்கி கடன் கிடைக்கவில்லை என்று கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற கடன் வழங்கும் நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், அதிமுக எம்.எல்.ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது அந்த நிகழ்ச்சியின் மேடைக்கு அருகே சென்று சதீஷ் என்பவர் சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். செய்தியாளர்களிடம் அவரிடம் எழுப்பிய் கேள்விக்கு, உரிய தகுதிகள் இருந்தும் தனக்கு வங்கி கடன் மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். ”பிரதமர் அலுவகத்தில் புகார் அளித்துள்ளேன். அரசு கடன் உதவி வழங்கும் என கூறிய நிலையில் தனக்கு ஏன் கடன் தரவில்லை என கேட்க வந்தேன்” என சதீஷ் கூறினார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதிக்கு வந்த கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தமராமசாமி அவரை மேடைக்கு பின்புறம் அழைத்து சென்றார்.

அப்போது மேடையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ”சும்மா லோன் கொடுக்குறோம்னு காட்ட 10 பேருக்கு லோன் கொடுக்குராங்க என சொல்கிறார்கள். ஜனநாயகத்தின் தூண்காக உள்ள மீடியா அவரிடம் பேட்டி எடுத்து நல்ல வேலையை செய்திருக்கிறார்கள். அன்பு நண்பரே மேல வாங்க... மோடி ஆட்சியில் எல்லோரின் முன்னேற்றத்திற்கும் பாடுபடுவோம். உங்களுக்கு லோன் கிடைக்கவில்லை என்பது மேடையில் வந்து சொல்லுங்க” என அழைத்தார்.

மேடைக்கு வந்த சதீஷ் ”நான் கோவையில் பிறந்து வளர்ந்து இங்கேயே வியாபாரம் செய்து வருகிறேன். 2004 ஆம் ஆண்டு முதல் வியாபாரம் செய்து வருகிறேன். லாக்டவுனில் எனது பணம் முழுவதும் செலவாகிவிட்டதால் வங்கி கடனை எதிர்பார்த்து உள்ளேன்.

எனக்கு வங்கி கடன் மறுக்கப்படுகிறது. இங்கு ஆகஸ்ட்டில் வந்தவர்களுக்கு செப்டம்பரில் பணம் தருவதாக கூறுகிறார்கள். கொலட்ரல் தருகிறேன் என்கிறார்கள் ஆனால் அதை மறுக்கிறார்கள், நீங்கள் சொல்வது உண்மை என்றால் எனக்கு எப்போது கடன் தருவீர்கள் என சொல்லுங்கள். கடனை மறுக்கிறீர்கள் என்றால் ஏன் கடனை மறுத்தீர்கள் என்று சொல்லுங்கள், கொடுக்கிறீர்கள் என்றால் எப்போது கொடுப்பீர்கள் என்று சொல்லுங்கள்” என கூறினார்.

சம்பந்தப்பட்ட வங்கியிடம் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாக மேடையிலேயே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி