தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Aavin Price List: தீபாவளியினை முன்னிட்டு ஆவினில் இனிப்புகள் விற்பனை - விலை எவ்வளவு தெரியுமா?

Aavin Price List: தீபாவளியினை முன்னிட்டு ஆவினில் இனிப்புகள் விற்பனை - விலை எவ்வளவு தெரியுமா?

Marimuthu M HT Tamil

Oct 06, 2023, 06:03 PM IST

google News
தீபாவளிப் பண்டிகையினை முன்னிட்டு ஆவினில் இனிப்பு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகையினை முன்னிட்டு ஆவினில் இனிப்பு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகையினை முன்னிட்டு ஆவினில் இனிப்பு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி, தனது பால் உபபொருட்களான வெண்ணெய், நெய், பால்கோவா, மைசூர் பாகு, குலாப்ஜாமுன், ரசகுல்லா, லஸ்ஸி, மோர், சாக்லேட் மற்றும் ஐஸ் கிரீம் போன்ற பால் பொருட்களை தயார் செய்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் தீபாவளிப் பண்டிகையினை ஒட்டி, கடந்தாண்டு ஆவின் இனிப்பு வகைகளை விற்பனை செய்தது. அதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்படி, இந்தாண்டும் கீழ்க்கண்ட இனிப்பு வகைகளை விற்பனை செய்யவுள்ளது.

அதில் 1. காஜூ கட்லீ (250 கிராம்) - ரூ.260

2. நட்ஸ் அல்வா (250 கிராம்) - ரூ.190

3. மோத்தி பாக் (250 கிராம்) - ரூ.180

4. காஜூ பிஸ்தா ரோல் (250 கிராம்) - ரூ.320

5. நெய் பாதுஷா(250 கிராம்) - ரூ.190

மேற்கண்ட 5 வகையான இனிப்புகள் அடங்கிய தொகுப்பு அரை கிலோ - ரூ.450 என்ற விலையில் ஆவின் பாலகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் நெய்யினால் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதாகவும், இந்த இனிப்பு வகைகள் வரும் அக்டோபர் 10ஆம் தேதி முதல் அனைத்து ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கும் எனவும் ஆவின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி