தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mid Day Meal Scheme: ’காமராஜரை தெரியும்! நெ.து.சுவை தெரியுமா?’ மதிய உணவு திட்டத்திற்கு ஸ்கெட்ச் போட்டவர்!

Mid Day Meal Scheme: ’காமராஜரை தெரியும்! நெ.து.சுவை தெரியுமா?’ மதிய உணவு திட்டத்திற்கு ஸ்கெட்ச் போட்டவர்!

Kathiravan V HT Tamil

Oct 12, 2023, 06:10 AM IST

google News
“1951ஆம் ஆண்டு குலக்கல்வித் திட்டத்தை ராஜாஜி அறிமுகம் செய்தபோது அதற்கு பொதுக்கல்வி இயக்குநரிடம் தனது ஆட்சேபத்தை தெரிவித்தார்”
“1951ஆம் ஆண்டு குலக்கல்வித் திட்டத்தை ராஜாஜி அறிமுகம் செய்தபோது அதற்கு பொதுக்கல்வி இயக்குநரிடம் தனது ஆட்சேபத்தை தெரிவித்தார்”

“1951ஆம் ஆண்டு குலக்கல்வித் திட்டத்தை ராஜாஜி அறிமுகம் செய்தபோது அதற்கு பொதுக்கல்வி இயக்குநரிடம் தனது ஆட்சேபத்தை தெரிவித்தார்”

உயர்கல்வி பயிலும் மாணவர்கள் சதவிகிதத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக தமிழகம் உயர்ந்து நிற்க அடித்தளமிட்டவர் காமராஜர். கல்வி வளர்ச்சிக்காக காமராஜர் மேற்கொண்ட பணிகளுக்கு பக்கபலமாக இருந்து இறுதி முனை வரை அதனை செயல்படுத்தி காட்டிய அதிகாரிதான் நெ.து.சுந்தரவடிவேலு.

பிறப்பும் படிப்பும்

காஞ்சிபுரம் மாவட்டம் நெய்யாடுபாக்கம் கிராமத்தில் துரைசாமி முதலியார் - சாரதாம்மாள் இணையருக்கு 1912ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி மகனாக பிறந்தவர் சுந்தரவடிவேலு.

1932ஆம் ஆண்டு மாநிலக் கல்லூரியில் பொருளாதாரத்தில் ஹானர்ஸ் பட்டம் பெற்ற இவர் தந்தை பெரியாரின் சுயமரியாதை கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார்.

அரசுப்பணி

பெரியாரின் நண்பரான வரதராஜுலு என்பவர் நடத்திய ‘தமிழ்நாடு’ எனும் பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றிய சுந்தரவடிவேலு 1934ஆம் ஆண்டு செங்கல்பட்டு உதவி பஞ்சாயத்து அலுவலகராக தனது அரசு பணியை தொடங்கினார்.

கல்வி விழிப்புணர்வு 

பகுத்தறிவு இயக்கத்தின் முன்னோடிகளாக அறியப்பட்ட குத்தூசி குருசாமியின் உறவினரான காந்தம்மாள் என்பவரை சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட நெ.து.சுந்தரவடிவேலு துணை கல்வி ஆய்வாளரானார். கடும் வறுமை மற்றும் சாதிய அடக்குமுறைகளால் பள்ளிக்கூடம் பக்கம் கூட தலைவைத்து படுக்காத குழந்தைகளிடம் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

குலக்கல்வி திட்டத்திற்கு ஆட்சேபம் 

1951ஆம் ஆண்டு குலக்கல்வித் திட்டத்தை ராஜாஜி அறிமுகம் செய்தபோது அதற்கு பொதுக்கல்வி இயக்குநரிடம் தனது ஆட்சேபத்தை தெரிவித்தார். 

காமராஜர் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு அரசின் பொதுக்கல்வித்துறையின் இயக்குநராக பொறுப்பேற்றார். நெ.து.சுந்தர வடிவேலுவை விட பணியில் மூத்த அதிகாரிகள் இருந்த போதிலும் அவரின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு அவரை ஒப்பொறுப்பிற்கு காமராஜர் கொண்டு வந்தார்.

மதிய உணவு திட்டத்திற்கு எதிர்ப்பு 

1955ஆம் ஆண்டு ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை வடிவமைத்தது, முதியோர் கல்வியை மேம்படுத்த நூல்களை உருவாக்கியது உள்ளட்ட செயல்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. பள்ளிகளில் மதிய உணவுத்திட்டத்தை காமராஜர் முன் வைத்த போது நிதிநிலையை காரணம் காட்டி பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன.

மதிய உணவுத்திட்டம் தொடக்கம் 

ஆனால் முதற்கட்டமாக மூன்றாயிரம் கிராமங்கள் ஊர்மக்களின் நிதிகள் மூலம் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. மதிய உணவு திட்டத்தை சாத்தியக் கூறுகளோடு வடிவமைத்து அதனை செயல்படுத்தியதில் நெ.து.சுந்தரவடிவேலு முக்கியமானவராக திகழ்ந்தார். அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி, இலவச சீருடை திட்டங்களை செயல்படுத்துவதிலும் நெ.து.சுந்தரவடிவேலு முக்கிய பங்காற்றினார்.

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் 

மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் ஓராசிரியர் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தார். 1969 முதல் 1975 ஆம் ஆண்டு வரை சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் நெ.து.சுந்தரவடிவேலு பணியாற்றினார். 

சென்னை பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக மாலை நேர வகுப்புகளை அறிமுகம் செய்தது இவரது முக்கிய சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

மறைவு

இவரது பணிகளை பாராட்டி 1961ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி நெ.து.சுந்தரவடிவேலு காலமானார். இவரது நூல்களை 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நாட்டுடமை ஆக்கியது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை