தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Isha Yoga Center: ஈஷா யோகா மைய பயிற்சிக்கு சென்ற பெண் சடலமாக மீட்பு - பரபரப்பு

Isha Yoga Center: ஈஷா யோகா மைய பயிற்சிக்கு சென்ற பெண் சடலமாக மீட்பு - பரபரப்பு

Karthikeyan S HT Tamil

Jan 01, 2023, 03:43 PM IST

google News
கோயம்புத்தூரில் ஈசா யோகா மைய பயிற்சிக்கு சென்று காணாமல் போன பெண் இரண்டு வாரங்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூரில் ஈசா யோகா மைய பயிற்சிக்கு சென்று காணாமல் போன பெண் இரண்டு வாரங்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூரில் ஈசா யோகா மைய பயிற்சிக்கு சென்று காணாமல் போன பெண் இரண்டு வாரங்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த பழனிகுமார் என்பவரது மனைவி சுப ஸ்ரீ கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 18ஆம் தேதி சுப ஸ்ரீ மாயமானதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சுப ஸ்ரீயின் கணவர் பழனிகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மாயமானதாக கூறப்படும் பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே சுப ஸ்ரீ செம்மேடு பகுதியில் ஓடிச்செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியானது.

இந்த நிலையில், சுப ஸ்ரீயை தேடும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 6 தனிப்படைகள் அமைத்து, அந்த பெண் எப்படி மாயமானார் என்பது குறித்து கோவை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்

இந்த நிலையில், செம்மேடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து ஒரு பெண் சடலம் கிடப்பதாகவும், துர்நாற்றம் வீசி வருவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலை தொடர்ந்து தீயணைப்புத்துறையினரும், காவல்துறையினரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது கிணற்றில் இறந்து கிடந்தது சுப ஸ்ரீ என்பது தெரியவந்துள்ளது. அழுகிய நிலையில் இருந்த அவரது உடல் மீட்கப்பட்டது.

ஈஷா யோக மையத்தில் இருந்து காணாமல் போன சுப ஸ்ரீ கிட்டதட்ட இரண்டு வாரங்களுக்கு பின்னர் செம்மேடு அருகே உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி