Rain Alert: ’மக்களே உஷார்! 13 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை! இதோ விவரம்! ’
Dec 19, 2023, 08:42 AM IST
”தென்மாவட்டங்களுக்கு இன்றைய தினமும் வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது”
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தென்மாவட்டங்களுக்கு இன்றைய தினமும் வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை 10 மணி வரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்கால் மாவட்டங்களில் இடி மின்னல் உடன் கூடிய மிதமான மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து இன்று வரை பதிவான மழையின் அளவு 44 செமீ, இந்த கால கட்டத்தின் சராசரி மழை அளவு 42 செ.மீ., இது இயல்பை விட 5 சதவீதம் அதிகம் ஆகும்.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 103 சதவீதமும், நெல்லை 135 சதவீதமும், தூத்துக்குடி 68 சதவீதமும், தென்காசி 80 சதவீதமும் இயல்பைவிட கூடுதலாக மழை பெய்துள்ளது.