Puzhal Prison Chennai: புழல் சிறையில் இதெல்லாமா நடக்குது?
Feb 17, 2023, 03:46 PM IST
புழல்சிறையில் மருத்துவ தாவரங்களின் இயற்கை நாற்றுப் பண்ணை திறந்துவைக்கப்பட்டது. இந்த நாற்றுப்பண்ணைகள் சிறைவாசிகளால் பராமரிக்கப்பட்டு, சந்தையில் விற்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வருவாய் சிறைவாசிகளின் நலனுக்குப் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆசியாவிலேயே 200 ஏக்கர் பரப்பளவில்நவீன வசதிகளுடன் அமைந்த மிகப்பெரிய சிறைச்சாலை சென்னையில் உள்ள புழல் மத்தியசிறை. இது சென்னையில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 300க்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகள் மற்றும் 2 ஆயிரம் விசாரணைகைதிகள், 150 பெண் கைதிகள் என மூன்று விதமான கைதிகளுக்கும்தனித்தனியான சிறைகளுடன் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் சிறைவாசிகளை அடைத்து வைக்கும் அளவுக்கு வசதி இங்கு உள்ளது. இந்த சிறை வளாகம் சுமார் 212 ஏக்கர் பரப்பளவு உள்ளது. சிறை வளாகத்தைச்சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள், 24 மணி நேரமும் பாதுகாப்புபணியில் சிறைக்காவலர்கள், கண்காணிப்புக் கோபுரங்களும் இருக்கின்றன.
இந்த சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு கைதிகள் பல்வேறு விவசாயப் பொருட்களை விளைவித்து வருகிறார்கள். புழல் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு சிறைகளிலும் கைதிகள் பல்வேறு பொருட்களை தயாரித்து, பல்வேறு பயிர்களை பயிரிட்டும் வருகிறார்கள். மேலும் சிறை வளாகத்தில் கைதிகளுக்கான நூலகங்களும் உள்ளன. கைதிகள் அந்த நூலகங்களில் உள்ள புத்தகங்களை படித்து பயன்பெறலாம்.
இந்நிலையில், புழல் சிறையில் மருத்துவ தாவரங்களின் இயற்கை நாற்றுப் பண்ணை திறந்துவைக்கப்பட்டது.
சிறைகள்மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை இயக்குனர் அறிவுறுத்தலின்படிபுழல் சிறைச்சாலையில் மருத்துவ மூலிகைகள், தாவரங்களின் நாற்றுப் பண்ணை திறக்கப்பட்டுள்ளது. பல மருத்துவ குணங்கள்கொண்ட இந்த நாற்றுப் பண்ணைசிறைவாசிகளால் பராமரிக்கப்படும். ரசாயன உரங்கள் அல்லது பூச்சிக்கொல்லிகள் இந்நாற்றுப் பண்ணையில் பயன்படுத்தப்படமாட்டாது. செடிகளின் விரைவான வளர்ச்சிக்காக நாற்றுப் பண்ணையில் பசுமை இல்லமும் வழங்கப்பட்டுள்ளது. மூலிகைகள் சந்தையில் விற்கப்பட்டு அதில் கிடைக்கும் லாபம் சிறைவாசிகளின் நலனுக்காக பயன்படுத்தப்படும்.
சிறைத்துறை இயக்குநர் அமரேஷ் பூஜாரி, இந்நாற்றுப்பண்ணையை ஆய்வு செய்து இதனை பராமரிக்கும் சிறைவாசிகளுடன்கலந்துரையாடினார். கண்காணிப்பாளர், நிகிலா நாகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்