தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dengue Fever: புதுக்கோட்டையில் 200ஐ தாண்டியது டெங்கு பாதிப்பு..ஒரே நாளில் 59 பேருக்கு காய்ச்சல்!

Dengue Fever: புதுக்கோட்டையில் 200ஐ தாண்டியது டெங்கு பாதிப்பு..ஒரே நாளில் 59 பேருக்கு காய்ச்சல்!

Karthikeyan S HT Tamil

Nov 27, 2023, 01:51 PM IST

google News
புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அது சார்ந்த நோய் பரவல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகமாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சல் பரவல் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது. டெங்கு காய்ச்சல் காரணமாக மொத்தம் 229 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

வீடுகள் தோறும் சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளிலும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திறந்த வெளியில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள், டயர்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும். டெங்கு தடுப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதுக்கோட்டை போல் மதுரையில் மேலும் 13 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து அங்கு பாதிப்பு 100 ஐ தாண்டி இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி