NLC Mining Expansion: என்எல்சி சுரங்க விரிவாக்கம்! விவசாய நிலங்களில் பணிகள் தொடக்கம் - பொதுமக்கள் எதிர்ப்பு
Jul 26, 2023, 11:54 AM IST
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நிலம் கையாக்கப்படுத்தும் பணியில் ஈடுபட்ட என்எல்சி நிர்வாகம், இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக விளைநிலங்களில் பயிர்களை அழித்ததால் கோபமடைந்த அந்த பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்திருக்கும் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்துக்காக பணியை என்எல்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியில் இன்று காலை தொடங்கப்பட்டது.
சோத்தியாதோப்பு அருகே கத்தாழை, கரிவட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆதனூர் உள்பட பல்வேறு பகுதியில் உள்ள விவசாய நிலைங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளில் ஈடுபட்டனர்.
அந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலம் கால்வாய் வெட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாம் சுரங்க விரிவாக்கத்துக்காக சுமார் 1500 மீட்டர் நீளம் கால்வாய் வெட்டப்பட்ட உள்ளது.
இன்று காலை சுமார் 450 மீட்டர் நீளத்துக்கு கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. தற்போது அங்கு பயிரிடப்பட்டுள்ள நெற்பயிற்கள் அறுவடைக்கு கூட தயார் ஆகாத நிலையில் பச்சை பயிற்களை அழித்து கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பயிர்களின் அறுவடைக்கு பின் கால்வாய் வெட்ட வேண்டும் எனவும், கையகப்படுத்தும் நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பை கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
இந்த விஷயத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தலாம் என்பதால், நில கையகப்படுத்தும் பகுதிகளில் சுமார் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நேற்று இரவு முதலே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே நிலம் கையகப்படுத்துவதை அறிந்த விவசாய நிலத்தின் விவசாயிகள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டனர். அப்போது அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விவசாய நிலத்துக்கு அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து இந்த நிலம் கையகப்படுத்துவதற்கு வழங்கப்படும் பணம் உரிய முறையில் வழங்கவில்லை என்று அங்கு கூடியிருந்த விவசாயிகள் குற்றம்சாட்டினர். சரியான முறையில் பணம் வழங்காமல் விவசாய நிலத்தை எந்தவித அறிவிப்புமின்றி காலை முதலே அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் கொண்டு அளிக்கின்றனர் என்று அவர்கள் கூறினர்.
இதற்கு அதிகாரிகள் தரப்பிலிருந்து, நிலம் கையகப்படுத்துவது குறித்து கடந்த மாதமே நாங்கள் அறிவித்தாக தெரிவித்தனர். இதில் என்எல்சி அதிகாரிகளுக்கும், நிலம் கையகப்படுத்துவதால் பாதிக்கப்பட்டு உரிய முறையில் இழப்பீடு பணம் பெறாத விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்