தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ptr Vs Annamalai: ’அண்ணாமலை பகிர்ந்த சர்ச்சை வீடியோ!’ தனது பாணியில் பிடிஆர் பதிலடி!

PTR Vs Annamalai: ’அண்ணாமலை பகிர்ந்த சர்ச்சை வீடியோ!’ தனது பாணியில் பிடிஆர் பதிலடி!

Kathiravan V HT Tamil

Jan 14, 2024, 09:53 AM IST

google News
”இன்னும் பல தமிழக பாஜக தலைவர்கள் வரலாம், போகலாம், ஆனால் தமிழகம் தனது இருமொழிக் கொள்கையிலிருந்து ஒருபோதும் விலகாது”
”இன்னும் பல தமிழக பாஜக தலைவர்கள் வரலாம், போகலாம், ஆனால் தமிழகம் தனது இருமொழிக் கொள்கையிலிருந்து ஒருபோதும் விலகாது”

”இன்னும் பல தமிழக பாஜக தலைவர்கள் வரலாம், போகலாம், ஆனால் தமிழகம் தனது இருமொழிக் கொள்கையிலிருந்து ஒருபோதும் விலகாது”

கடந்த சில நாட்களாக ட்விட்டரில் ஓய்ந்து இருந்த பிடிஆர்- அண்ணாமலை இடையிலான கருத்து யுத்தம் மீண்டும் தொடங்கி உள்ளது.

திமுக பொறுப்பேற்றது முதல் நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசின் நிதி மற்றும் பொருளாதார கொள்கைகளை விமர்சித்து கடுமையாக பேசி வந்தார். அவரது ட்விட்டுகள் தேசிய அளவில் பெரும் பேசு பொருள் ஆனது.

ஆடியோ சிக்கல்

பின்னர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குரலில் பேசுவது போல் வெளியான ஆடியோவால் அவரது ஆக்டீவ் அரசியல் படிப்படியாக குறையத் தொடங்கியது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலி ஆடியோவை உருவாகி கசியவிட்டதாக பிடிஆர் விளக்கம் அளித்திருந்தார்.

ஆக்டிவ் அரசியலில் இருந்து விலகல்

இதனை தொடர்ந்து அமைச்சரவையிலும் அவரது துறை மாற்றப்பட்டது. அவரிடம் இருந்த நிதித்துறை மாற்றப்பட்டு தகவல் தொழில்நுட்பத்துறை வழங்கப்பட்டது. இதன்பின்னர் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இறங்கி விவாதங்கள் செய்வதை பிடிஆர் குறைத்துக் கொண்டார். மேலும் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை குறைத்துக் கொண்ட அவர் ஐடி துறை மற்றும் பொருளாதாரம் சார்ந்து நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக்கி கொண்டிருந்தார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் நடைபெற்ற அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிடிஆர் முகம் தென்பட்டது. அவரது பேச்சை கேட்க அரங்கத்தில் ஏராளமானோர் கூடினர்.

அயலகத் தமிழர் தின கருத்தரங்கம்

பின்னர் சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற ‘அயலகத் தமிழர் தின’ விழாவில்‛ஒளிரும் எதிர்காலம்.. வாய்ப்புகளும், சவால்களும்.. என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்களில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது ‘எட்டுத்திக்கும் தமிழர் செல்ல வேண்டும் நாம் இந்தி திணிக்கிறார்கள், சமஸ்கிருதம் திணிக்கிறார்கள் என சொல்வதை தவிர்த்துவிட்டு எல்லா மொழியை கற்கும் வகையில் திட்டம் கொண்டு வர வேண்டும். ஏன் சிபிஎஸ்சி பாட திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏன் தடுக்கிறது’ கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,‛‛ யார் தடுக்கிறார்கள்'' என கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த நபர், ‛‛ நமது அரசு'' என பதிலளித்தார்.

இதற்கு பதில் அளித்த பிடிஆர், ‛‛ சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மத்திய கல்வி வாரியம் அமல்படுத்துகிறது. தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சிபிஎஸ்இ தனது கல்வியை வழங்கி வருகிறது. அதேபோல தமிழக அரசுக்கு என்று தனி வாரியம் அடிப்படையில் கல்வி கொள்கை வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது'' என்றார்.

அப்போது “நானும் திராவிடன்தான், என் பெயரும் கருணாநிதிதான் என கூறினார்” நீங்கள் எந்த நாட்டில் இருந்து வருகிறீர்கள் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தார்.

இந்த வீடியோவை பகிர்ந்து ட்வீட் செய்திருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “3 மொழிக் கொள்கையை அமல்படுத்த தமிழக அரசு ஏன் எதிர்க்கிறது என்று திமுக அமைச்சர் திரு பிடிஆரிடம் முதியவர் திரு கருணாநிதி கேள்வி எழுப்பினார்.KATH

அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை மூன்றாம் மொழி கற்கும் வாய்ப்பை இழந்த தமிழக அரசின் தவறான கொள்கைகளை அம்பலப்படுத்தியதற்காக, திமுக அமைச்சரால் அவர் மிரட்டப்பட்டு, மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்” என பதிவிட்டிருந்தார்.

சமூகவலைத்தளத்தில் அண்ணாமலை பகிர்ந்துள்ள வீடியோவுக்கு பதில் அளித்து எக்ஸ் சமூகவலைத்தளத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட் செய்துள்ளார்.

அதில் “முழுக்கதையையும் பார்க்காதவர்களுக்காக இதோ இரண்டாம் பாதி. அரை உண்மைகளையும், திரிக்கப்பட்ட முழு பொய்களையும் பரப்புவதை வாடிக்கையாக கொண்ட திரு அண்ணாமலை, வளர்ந்த நம் மாநிலத்தில் தனது பிரச்சாரத்தை மேலும் தொடர வீணான முயற்சியில் ஈடுபடுகிறார் - நமது மொழிக் கொள்கைக்கான அரசியல் காரணங்கள் குறித்து நான் பேசிய வீடியோவை அவர் பகிராமல் விட்டுவிட்டார்.

இந்த சம்பவத்தின் முழு விவரங்களும் ஏற்கனவே அச்சு மற்றும் காணொளி வடிவில் ஆன்லைனில் பரவலாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கூட்டத்தில் இருந்து யாரும் வெளியேற்றப்படவில்லை. ஒவ்வொரு முறையும் நான் "காத்திருங்கள்" என்று சொல்லும் போது, கேள்வி கேட்டவருக்கு பதிலளிக்க வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த நபர் தனது இருக்கைக்குத் திரும்பி, எனது அமர்வு முடியும் வரை அங்கேயே இருந்ததோடு மட்டுமல்லாமல், அடுத்தடுத்த அமர்வுகளிலும் கலந்து கொண்டார்.

இன்னும் பல தமிழக பாஜக தலைவர்கள் வரலாம், போகலாம், ஆனால் தமிழகம் தனது இருமொழிக் கொள்கையிலிருந்து ஒருபோதும் விலகாது, கட்டாய மும்மொழிக் கொள்கையை ஏற்காது, இதுவே இந்தியை தொண்டைக்குள் திணித்து, நமது மொழியைக் குறைக்கும் முயற்சியாகும். தாய் தமிழ், இந்தி-பெல்ட் மாநிலங்களின் தாய்மொழிகளுக்கு நடந்துள்ளது” என பிடிஆர் குறிப்பிட்டுள்ளார்.

பிடிஆர் பேசும் வீடியோவில், 'தமிழ்நாட்டை பொறுத்தவரை விரும்பும் மொழியை யார் வேண்டுமானாலும் கற்க முடியும். தமிழ்நாடு மாநில பாட திட்டத்தில் படித்த நான் தமிழ் மொழியோடு சேர்ந்து பிரஞ்சு மொழி பயின்றேன். சென்னையில் படித்து வரும் எனது குழந்தைகள் பிரஞ்சும், ஸ்பானீஷும் கற்று வருகிறார்கள். ஒருவர் மொழி கற்பதை இங்கு யாரும் தடுத்துவிடவில்லை’ என கூறி உள்ளார்.

அடுத்த செய்தி