தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Modi: பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை- 6000 போலீசார் குவிப்பு

Modi: பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை- 6000 போலீசார் குவிப்பு

Feb 27, 2024, 09:39 AM IST

google News
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் பகுதியில் உள்ள மைதானம் முழுவதும் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்பதால் பல்லடம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. (HT_PRINT)
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் பகுதியில் உள்ள மைதானம் முழுவதும் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்பதால் பல்லடம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் பகுதியில் உள்ள மைதானம் முழுவதும் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்பதால் பல்லடம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பான பாஜக தனது அணியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது. இன்று பல்லடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

பல்லடம் மாதப்பூரில் நடக்கும் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழா இன்று நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இதற்காக பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் 2.05 மணிக்கு கோவை மாவட்டம் சூலூர் விமான படை தளத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து மாதப்பூரில் நடக்கும் பொது கூட்ட மேடைக்கு காரில் செல்கிறார். பின்னர் மோடியும் அண்ணாமலையும் இணைந்து வாகனத்தில் பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார்கள். மதியம் 2.45 மணி முதல் 3.45 மணி வரை பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். பின்னர் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்கிறார். மதுரையில் தனியார் பள்ளியில் நடைபெற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அவர் இரவு மதுரையில் தனியார் விடுதியில் தங்குகிறார்.

நாளை ஹெலிகாப்டர் மூலம் மதுரையில் இருந்து தூத்துக்குடி செல்லும் பிரதமர் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். காலை 11:15 முதல் 12.15 மணி வரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் செல்கிறார்.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் பகுதியில் உள்ள மைதானம் முழுவதும் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்பதால் பல்லடம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் ஜான் பாண்டியன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னதாக நேற்று கோவை வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது,

"என் மண் என் மக்கள் யாத்திரை திமுக அரசின் ஊழல்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் யாத்திரையாகவும், திமுக இயலாமையை எடுத்துச்செல்லும் யாத்திரையாகவும், பிரதமரின் 10 ஆண்டுகளாக சாதனைகளையும் எடுத்துச்செல்லும் யாத்திரையாக அமைந்து இருப்பதாகவும் தெரிவித்தார். 
இந்த யாத்திரை234 தொகுதியிலும் யாத்திரை முடிந்து இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் கிராமம்தோறும் கஞ்சா ஊடுறுவி இருக்கின்றது. இதற்கு உதாரணமாக திமுக நிர்வாகியே 3000 கோடி ரூபாய் அளவிற்கு கடத்தலில் ஈடுபட்டுள்ளது வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது என்றார். இந்த போதை பொருள் விடயத்தில் திமுக எந்தளவு கடத்தல்காரர்களை பாதுகாத்து இருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது. திமுக தலைவர் ஸ்டாலின் இது குறித்து விளக்கத்தை சொல்ல வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகின்றார்கள் என்று தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளவர்கள் நாளை பிரதமர் பங்கேற்கும் மாநாட்டிற்கு வருகிறார்கள், எனவும் மேலும் யார் வருவார்கள் என்பதை நாளை பொறுத்திருந்து பாருங்கள் எனவும் தெரிவித்தார்.

இன்று மாலை 5 மணிக்கு முக்கிய தகவல் வெளியாகும் என பா.ஜ.க மாநிலதலைவர் அண்ணாமலை கூறி இருப்பது குறித்த கேள்விக்கு, யார் வருகின்றார்கள் என்பதை கொஞ்சம் காத்திருந்து பாருங்கள் எனவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி