தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஆடி பெளர்ணமி: அரிவாள் மீது ஏறிநின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறிய பூசாரி

ஆடி பெளர்ணமி: அரிவாள் மீது ஏறிநின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறிய பூசாரி

Karthikeyan S HT Tamil

Aug 12, 2022, 03:11 PM IST

google News
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்துள்ள கோட்டநத்தம் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில் பூசாரி அரிவாள் மீது ஏறிநின்று அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோட்டநத்தம் கிராமத்தில் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பணசாமி மற்றும் கள்ளழகர் கோயில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் மாதம் தோறும் பௌர்ணமி தினத்தன்று சிறப்பு பூஜைகளும், ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு கொடை விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஆடி மாத பெளர்ணமி கொடை விழா கடந்த 5ஆம் கொடியேற்றி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியோடு தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கோயில் பூசாரி அரிவாள் மீது ஏறிநின்று அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. இதை முன்னிட்டு ஆற்றுக்கு சென்று புனித நீர் எடுத்து வந்து பின்னர் பால், சந்தனம் உள்ளிட்டவைகளை கொண்டு பதினெட்டாம்படி கருப்பணசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூசாரி சிறப்பு அபிஷேகங்கள் செய்தார். அதனைத் தொடர்ந்து தீ மிதி உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தி, கருப்பணசாமியை வழிபட்டனர்.

<p>பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில்</p>

பௌர்ணமி கொடை விழாவில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், இங்குள்ள ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் சுவாமிக்கு மதுரை கள்ளழகர் கோயிலில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி