Ponmudi: சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி விடுதலை!
Jun 28, 2023, 07:07 PM IST
போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியையும் வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவியை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. இவரது மனைவி விசாலாட்சி. இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக கூறி கடந்த 2006ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் வழங்கும் போது அமைச்சர் பொன்முடி தன் மனைவியுடன் ஆஜரானார். இதைத்தொடர்ந்து போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியையும் வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்