தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ayudha Pooja 2022 : ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

Ayudha Pooja 2022 : ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

Divya Sekar HT Tamil

Oct 04, 2022, 12:45 PM IST

google News
இன்று ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்று ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இன்று ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை : தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை அவர்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி திருநாளை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த நல்வாழ்த்துகள்.

இந்நன்னாளில் கல்வி,செல்வம், துணிவை அளிக்கும் கலைமகள்,திருமகள்,மலைமகள் அருளால் வாழ்வில் வெற்றிகள் குவிந்து மேன்மை பெற வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓ. பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில்,” அன்னை மகா சக்தியின் அருளால் மக்கள் அனைவரும் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று, எல்லா நலங்களையும், வளங்களையும் பெற்று, பகையின்றி ஒற்றுமையோடு வாழ்ந்திட எனது 'ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி' நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “புதிய பாதை, புதிய முயற்சிகளைத் தொடங்கும் விஜயதசமி, உதவும் கலன்களுக்கு நன்றி சொல்லும் ஆயுத பூஜை அன்று அன்னை பராசக்தியை வணங்கி சகோதர சகோதரிகளுக்கு பாஜக சார்பாக ஆயுத பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.”எனத் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ”செய்யும் தொழிலைப் போற்றி வணங்கும் ஆயுத பூஜையையும், வெற்றித்திருநாளான விஜயதசமியையும் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்”எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் முன்னாள் அதிமுக அமைச்சர் சி. விஜயபாஸ்கர், "தளர்வறியா மனம் கொண்டுகல்வியில் சிறந்து தொழிலில் உயர்ந்து செல்வத்தில் நிறைந்து வாழ்வாங்கு வாழ அனைவருக்கும் என் இனிய சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுதபூஜை நல்வாழ்த்துகள் " என்று பதிவிட்டுள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி