தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Atm Robbery: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - ஆரவல்லி மலையில் சிக்கிய குற்றவாளி

ATM Robbery: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - ஆரவல்லி மலையில் சிக்கிய குற்றவாளி

May 04, 2023, 08:45 PM IST

google News
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம் கொள்ளை வழக்கில் மூளையாகச் செயல்பட்ட ஆசிப் ஜாவேத் என்பவரை காவல்துறையினர் ஆரவல்லி மலைப்பகுதியில் வைத்து கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி அதிகாலை நேரத்தில் போளூர் திருவண்ணாமலை கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் நான்கு ஏடிஎம் மையங்களில் அடையாளம் தெரியாத கும்பல் கேஸ் வெல்டிங் எந்திரம் மூலம் ஏடிஎம் எந்திரங்களை வெட்டி அதிலிருந்து 72 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுக்க மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தியது. இது தொடர்பாகத் தனிப்படை அமைக்கப்பட்டு கர்நாடகா குஜராத் ஹரியானா ஆந்திரா உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் விசாரணையில் 7 பேரைக் கைது செய்தனர்.

மேலும் இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த தஸ்லீம் கான் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். கொள்ளையர்கள் ஏடிஎம் மையங்களைக் கொள்ளையடிப்பதற்கு உதவியாக அவர்களின் காரை ஓட்டியவர் என்ற முறையில் இவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இந்த கொள்ளை வழக்கில் மூளையாகச் செயல்பட்டு முக்கிய குற்றவாளியாக மறைந்திருந்தவரைக் காவல் துறையினர் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.

ஹரியானா - ராஜஸ்தான் எல்லையில் ஆரவல்லி மலைப்பகுதியில் ஆசிப் ஜாவத் என்பவரைத் தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

டாபிக்ஸ்

அடுத்த செய்தி