தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crime : முதல் மனைவிக்கு ஷாக் கொடுத்த கணவர்.. இளம் பெண்ணை 2ஆவது திருமணம் செய்த தேமுதிக பிரமுகர் கைது!

Crime : முதல் மனைவிக்கு ஷாக் கொடுத்த கணவர்.. இளம் பெண்ணை 2ஆவது திருமணம் செய்த தேமுதிக பிரமுகர் கைது!

Divya Sekar HT Tamil

Jul 11, 2023, 07:10 PM IST

google News
இளம் பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி 2ஆவது திருமணம் செய்த தேமுதிக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
இளம் பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி 2ஆவது திருமணம் செய்த தேமுதிக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

இளம் பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி 2ஆவது திருமணம் செய்த தேமுதிக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

மார்த்தாண்டம் அருகே உள்ள கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் தேமுதிக பிரமுகர் விஜின் குமார் (36), ஆட்டோ டிரைவர். இவருக்கு சந்தியா (34) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சந்தியா, பாகோட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஆனால் இவர்களுக்குள் விவாகரத்து ஆகவில்லை.

அவர் கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விஜின் குமார் தனது மனைவிக்கு தெரியாமல் 18 வயது இளம் பெண் ஒருவரை 2-வது திருமணம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தியா, தனது குழந்தைகளை அழைத்து சென்று கணவர் 2-வது திருமணம் செய்தது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

இதனால் ஆத்திரம் கொண்ட விஜின் குமார் ஏற்கனவே உனது பெற்றோரிடம், உனக்குச் சொந்தமான சொத்துக்களை எழுதி கேட்டேன். ஆனால் அவர்கள் தரவில்லை, மேலும் ரூ.10 லட்சம் கேட்டதற்கு அதையும் கொடுக்கவில்லை, எனவே நீ எனக்கு தேவையில்லை என 2-வது திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெட்டுக்கத்தியால் வெட்டவும் முயன்றுள்ளார். இதனால் பயந்து போன சந்தியா அங்கிருந்து தப்பிச் சென்று மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் விஜின்குமார், 2ஆவது திருமணத்தை நடத்தி வைத்த ஈத்தவிளை சபை போதகர் பிரின்ஸ், உடந்தையாக இருந்த களியலை சேர்ந்த சிவகுமார், சுரேஷ் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் அந்த 4 பேரும் கேரளாவில் தலைமறைவாகி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து அந்த 4 பேரையும் கைது செய்ய போலீசார் கேரளா விரைந்துள்ளனர். பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டு விஜின்குமாரை கைது செய்தனர்.மேலும் விஜின் குமாருக்கு பல பெண்களுடன் பழக்கம் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை