தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ammk President: அமமுகவின் ஒரே ஒரு பேரூராட்சி தலைவரை கட்சியில் இருந்து நீக்கிய டிடிவி

AMMK President: அமமுகவின் ஒரே ஒரு பேரூராட்சி தலைவரை கட்சியில் இருந்து நீக்கிய டிடிவி

Karthikeyan S HT Tamil

Apr 21, 2023, 11:58 AM IST

google News
Orathanadu AMMK President: ஒரத்தநாடு பேரூராட்சி தலைவரும் அமமுகவின் தெற்கு மாவட்ட செயலாளருமான சேகரை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைப்பதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
Orathanadu AMMK President: ஒரத்தநாடு பேரூராட்சி தலைவரும் அமமுகவின் தெற்கு மாவட்ட செயலாளருமான சேகரை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைப்பதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

Orathanadu AMMK President: ஒரத்தநாடு பேரூராட்சி தலைவரும் அமமுகவின் தெற்கு மாவட்ட செயலாளருமான சேகரை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைப்பதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் அமமுக 9 வார்டுகளை கைப்பற்றி பேரூராட்சி தலைவர் பதவியைப் பிடித்திருந்தது. மீதமுள்ள தலா 3 வார்டுகளில் திமுகவும், அதிமுகவும் வெற்றி பெற்றிருந்தன. இதில், வார்டு 8-இல் அமமுக தெற்கு மாவட்டச் செயலர் மா.சேகரும், வார்டு 11-ல் இவரது மனைவி திருமங்கை சேகரும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர். பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் சேகர் வெற்றி பெற்றதன் மூலம் அமமுக ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றி இருந்தது.

இந்த நிலையில் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவரும் அமமுகவின் தெற்கு மாவட்ட செயலாளருமான சேகரை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் சேகர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்றுமுதல் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சி உடன் பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத்தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேகர், இன்று அல்லது நாளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிடிவி தினகரனின் அமமுகவுக்கு இருந்த ஒரே ஒரு பேரூராட்சி தலைவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது அக்கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி