தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Orange Alert: தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்- வானிலை ஆய்வு மையம்

Orange alert: தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்- வானிலை ஆய்வு மையம்

Karthikeyan S HT Tamil

Nov 09, 2022, 08:49 PM IST

google News
சென்னை: தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 11, 12-ம் தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 11, 12-ம் தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 11, 12-ம் தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கி இருக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நாளை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை இருக்கும் என்றும் வரும் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் தமிழகத்திற்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 15 உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 12 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கும் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளுக்கும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி