OPS : ‘சமாதானம் சொல்லி தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியம்’ தியாகத்திற்கு ஆயத்தமாக அழைத்த ஓபிஎஸ்
Jun 06, 2024, 09:23 AM IST
O Panneerselvam : "தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே" என்னும் கழக நிறுவனர், புரட்சித்தலைவர் மக்கள் திலகத்தின் மந்திர மொழியை மருந்தாக கொள்வோம். நமது வெற்றியை நாளை சரித்திரம் ஆக்கிட மனமாச்சியம் மறந்து ஒற்றை கோடி தொண்டர்களும் ஒன்றாக்குதல் காண்போம்.
O Panneerselvam : புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒற்றுமையால் மீட்டெடுக்க வேண்டும் என முன்னாள் முதுல்வர் ஓபன்னீர் செல்வம் அறைகூவல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம், கத்தைக் குச்சியை முறிப்பது கடினம்" இனியும் சமாதானம் சொல்லி தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியம் ஆகும்.
"தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே" என்னும் கழக நிறுவனர், புரட்சித்தலைவர் மக்கள் திலகத்தின் மந்திர மொழியை மருந்தாக கொள்வோம். நமது வெற்றியை நாளை சரித்திரம் ஆக்கிட மனமாச்சியம் மறந்து ஒற்றை கோடி தொண்டர்களும் ஒன்றாக்குதல் காண்போம். மாண்புமிகு நம் அம்மா அவர்கள் உச்சத்தில் அமர்த்திப் போன கட்சியையும் அவர்கள் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்துக்கும் ஆயத்தமாகும்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (ஜூன் 04) நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
2019ஐ விட அதிக ஓட்டுக்கள் வாங்கிய அதிமுக
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளை கைப்பற்றியது திமுக தலைமையிலான கூட்டணி. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மற்றும் தேனி தொகுதியில் வெற்றி பெற, அதிமுகவுக்கு அது ஒன்று மட்டுமே ஆறுதலாகவும் இருந்தது.
அதே நேரத்தில் அதிமுக, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தலில் 18.48 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தது. இந்த முறை 20.46 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்கிறது. இது கடந்த தேர்தலோடு ஒப்பிடும் போது, 2.06 சதவீதம் அதிகமாகும். இதில் மற்றொரு குறிப்பிடும் சாரம்சமும் உள்ளது.
கூட்டணி இல்லாமல் அதிமுகவின் வாக்கு சதவீதம் அதிகரிப்பு
கடந்த தேர்தலில் திமுக, தற்போதுள்ள இதே கூட்டணியுடன் தான் தேர்தலை சந்தித்தது. ஆனால், அதிமுக இந்த முறை பாஜக, பாமக, தமாக உள்ளிட்ட பல கூட்டணி கட்சிகள் இல்லாமல் போட்டியிட்டது. அப்போது அதிமுக உடன் ஓபிஎஸ் இருந்தார். இந்த முறை அவரது அணி என்கிற ஒரு தரப்பு பிரிவையும் அதிமுக சந்தித்தது. அத்தனையும் கடந்து அதிமுக இந்த முறை பெற்றிருக்கும் வாக்குகள், அபாரமானது தான் என்றாலும், வெற்றி இல்லை எனும் போது, அதை கொண்டாடவோ, தூக்கிப் பிடிக்கவோ இயலாத நிலையில் அதிமுக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9