தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அரசு மருத்துவமனையில் ஷாக்..தவறான சிகிச்சையால் ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகியதா?

அரசு மருத்துவமனையில் ஷாக்..தவறான சிகிச்சையால் ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகியதா?

Karthikeyan S HT Tamil

Jul 02, 2023, 05:17 PM IST

google News
Rajiv Gandhi Government Hospital: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை மூலம் ஒன்றரை வயது குழந்தையின் அழுகிய வலது கை அகற்றப்பட்டுள்ளது.
Rajiv Gandhi Government Hospital: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை மூலம் ஒன்றரை வயது குழந்தையின் அழுகிய வலது கை அகற்றப்பட்டுள்ளது.

Rajiv Gandhi Government Hospital: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை மூலம் ஒன்றரை வயது குழந்தையின் அழுகிய வலது கை அகற்றப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் என்பவருக்கு ஒன்றரை வயதில் முகமது மகிர் என்ற ஆண் குழந்தை உள்ளது. குறை பிரசவத்தில் இக்குழந்தை பிறந்த நிலையில் அதற்கு தலையில் ரத்த கசிவு மற்றும் நீர் கசிவு உள்ளிட்ட சில பாதிப்புகள் இருந்துள்ளன. இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

குழந்தையின் கையில் ட்ரிப்ஸ் போடப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு குழந்தையின் கை கருப்பாக மாறியுள்ளது. இது குறித்து செவிலியர்களிடம் அந்த குழந்தையின் தாய் தெரிவித்த போது, எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளனர்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அந்த குழந்தையின் வலது கை கடந்த மாதம் 26ஆம் தேதி அழுக தொடங்கியுள்ளது. மருத்துவர்கள் குழந்தையின் கையை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் கையில் ட்ரிப் போடும் போது ஏற்பட்ட கவன குறைவே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து அந்த குழந்தையின் பெற்றோர் புகார் அளித்த நிலையில், குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்காக அழுகிய நிலையில் இருந்த கையை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதன்படி இன்று அந்த குழந்தைக்கு மயக்க மருந்து செலுத்திய நிலையில் அறுவை சிகிச்சை நடந்தது. இரண்டு மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையின் முடிவில் குழந்தையின் வலது கை முழுவதுமாக அகற்றப்பட்டது.

இதையடுத்து தொடர் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தையின் உடல் நிலை நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி குறைவான குழந்தை என்பதாலும், குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதாலும் அதற்கான சிகிச்சைகளும் எடுக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே குழந்தையின் கை அழுகுவதற்கு காரணம் தவறான சிகிச்சையா? அல்லது மருத்துவ பணியாளர்களின் கவனக் குறைவா? என்பதை கண்டறிய மூன்று பேர் கொண்ட மருத்துவ குழு அமைக்கப்பட்டிருப்பதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி