தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘96’ பட பாணியில் ஒரு முன்னாள் மாணவர்கள் ரீ யூனியன் - எஸ்கேப்பான பழைய காதல் ஜோடி

‘96’ பட பாணியில் ஒரு முன்னாள் மாணவர்கள் ரீ யூனியன் - எஸ்கேப்பான பழைய காதல் ஜோடி

Priyadarshini R HT Tamil

Mar 14, 2023, 09:04 AM IST

google News
Student Reunion : முன்னாள் மாணவர்கள் சந்திப்பின்போது சந்தித்துக்கொண்ட முன்னாள் காதலர்கள் காணாமல்போயினர். இச்சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Student Reunion : முன்னாள் மாணவர்கள் சந்திப்பின்போது சந்தித்துக்கொண்ட முன்னாள் காதலர்கள் காணாமல்போயினர். இச்சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Student Reunion : முன்னாள் மாணவர்கள் சந்திப்பின்போது சந்தித்துக்கொண்ட முன்னாள் காதலர்கள் காணாமல்போயினர். இச்சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் 35 ஆண்டுகளுக்கு பின் பள்ளியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பழைய காதல் நினைவுகள் துளிர்விட்டதால் காதல் ஜோடி தலைமறைவானார்கள். இதனால் அவர்கள் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவ-மாணவிகள் ‘ரீ யூனியன்' என்ற பெயரில் சந்தித்தனர். இதில் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ஒரு முன்னாள் மாணவரும், இடுக்கியை சேர்ந்த முன்னாள் மாணவியும் கலந்துகொண்டனர்.

இவர்கள் இருவரும் பள்ளி பருவத்தில் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், படிப்பு முடிந்த பின் இருவரும் அவர்களின் பெற்றோர்கள் கூறியபடி வேறு வேறு நபர்களை திருமணம் செய்து கொண்டனர். இருவரும் அவரவர் குடும்பத்துடன் வசித்து வந்தனர். தற்போது இவர்களுக்கு 50 வயதை எட்டுகிறது.

இந்நிலையில் வகுப்பு தோழர்கள் சேர்ந்து பள்ளியில் மறுசந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். இதில் முன்னாள் காதலர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்து பார்த்தபோது முன்னாள் காதலர்கள் இருவரும் தலைமறைவானார்கள். ‘ரீயூனியன்' நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் வீடு திரும்பாததால் அவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். 

இதுபற்றி எர்ணாகுளம் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முன்னாள் காதலர்களை தேடி வருகின்றனர். தனது கணவரை காணவில்லையே என்று மனைவியும், தனது மனைவியை காணவில்லையே என்று கணவரும் வழிமேல் விழிவைத்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு குழந்தைகளும் உண்டு. 

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு குறித்த 96 என்ற ஒரு படம் அண்மையில் வெளிவந்தது. அதில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்திருப்பார்கள். பள்ளிப்பருவத்தில் காதலித்து இருப்பார்கள். ஆனால் அவர்கள் பிரிந்துவிடுவார்கள். நீண்ட நாட்களுக்குப்பின்னர் இதுபோன்ற ஒரு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்து கொள்வார்கள். அப்போது அவர்கள் மிகவும் கண்ணியமாகவே நடந்துகொள்வார். ஒரு கட்டத்தில் திரிஷா அவருடன் தனியாக தங்க நேரிடும் அப்போது கூட இருவரும் மிக கண்ணியமாக நடந்துகொள்வார்கள். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய படம் 96. இப்போதும் அதுபோன்ற ஒரு சந்திப்பு நிகழ்ச்சியில் சந்தித்துக்கொண்ட முன்னாள் காதலர்கள் காணாமல் போயுள்ளார்கள். 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை