தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மனைவி வேண்டாம்… காதலி போதும்… சாலையில் வாகனங்களை நிறுத்தி ரகளை செய்த வாலிபர்

மனைவி வேண்டாம்… காதலி போதும்… சாலையில் வாகனங்களை நிறுத்தி ரகளை செய்த வாலிபர்

Priyadarshini R HT Tamil

Mar 26, 2023, 12:44 PM IST

மனைவி வேண்டாம், காதலியுடன் தான் வாழ்வேன் என்று தர்மபுரி அடுத்த அரூரில், சாலையில் சென்ற வாகனங்களை மறித்து வாலிபர் ரகளையில் ஈடுபட்டார்.
மனைவி வேண்டாம், காதலியுடன் தான் வாழ்வேன் என்று தர்மபுரி அடுத்த அரூரில், சாலையில் சென்ற வாகனங்களை மறித்து வாலிபர் ரகளையில் ஈடுபட்டார்.

மனைவி வேண்டாம், காதலியுடன் தான் வாழ்வேன் என்று தர்மபுரி அடுத்த அரூரில், சாலையில் சென்ற வாகனங்களை மறித்து வாலிபர் ரகளையில் ஈடுபட்டார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரசூல். ரசூலுக்கும் மனைவி ஹாய்ஸ்யா பானுவுக்கும் திருமணமானி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், ரசூலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் கடந்த உறவில் உள்ளதாக கூறப்படுகிறது. பலமுறை கெஞ்சியும் அடஙகாத ரசூல் மீது ஹாய்ஸ்யா பானு அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.  

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Arrest: ‘சவுக்கு சங்கர் கைது! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!’ ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

’காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயகுமார் தன்சிங் கொலைக்கு போலீஸ்தான் காரணம்!’ ஆதாரத்தை அடுக்கும் அன்புமணி ராமதாஸ்!

Jayakumar Dhanasingh: ‘நெல்லை காங்கிரஸ் பிரமூகர் எரித்துக் கொலையா?’ விளாசும் ஈபிஎஸ்! சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை

Congress: ’காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணத்திற்கு நான் காரணமா?’ ரூபி மனோகரன் எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி!

ரசூலை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரித்த போலீசார். அவருக்கு இருந்த திருமணம் கடந்த உறவை துண்டித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினர். இதில் ஆத்திரமடைந்த ரசூல், ‘நான் காதலியுடன்தான் வாழ்வேன். இல்லையேல் செத்துவிடுவேன்‘ என்று ஆவேசமாக கூறிவிட்டு போலீஸ் நிலையத்தில் இருந்து இறங்கி சாலையில் ஓடினார். 

சாலைகளில் சென்ற கார் முன்பு நின்று முதலில் ரகளை செய்தார். உடனடியாக அந்தக்காரரை நிறுத்திய கார் ஓட்டுனர், ரசூலைக்கடந்து அவர் மீது படாமல் சென்றுவிட்டார். பின்னர் சாலையில் இங்கும் அங்கும் ஓடிய ரசூல், சாலையில் வந்த ஒரு பேருந்தின் முன் நின்று சென்று, தன் மீது பேருந்தை ஏற்றிக்கூறி கூச்சலிட்டார். அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களையும் வழிமறித்து இவ்வாறு கூறினார். நல்லவேளையாக அனைத்து வாகன ஓட்டிகளும் தாங்கள் ஓட்டி வந்த வாகனங்கள் அவர் மீது ஏறிவிடாமல் பாதுகாப்பாக வாகனத்தை இயக்கினர். இதனால் அவருக்கு அடி ஏதும் படவில்லை.  

ரசூலின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பைக் மற்றும் கார்களில் சென்று அவரை மடக்கிப்பிடிக்க முயன்றார்கள். அவர்களுக்கும் போக்குக்காட்டியபடி பேருந்துகளையெல்லாம் மறித்துக்கொண்டு மீண்டும், மீண்டும் ரசூல் கடும் சேட்டை செய்துகொண்டிருந்தார். அவரை சாலையில் சென்றவர்கள் மற்றும் வாகனங்களில் சென்றவர்கள் பார்த்துச்சென்றார்கள். 

ஆத்திரமடைந்த ரசூலின் உறவினர்கள் சாலையில் இறங்கி அவரை அடித்து, காரை எடுத்து வந்து அவரை ஏற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். உறவினர்கள் அழைத்து வந்த ரசூலை பெண் போலீசார் மடக்கிப்பிடித்துச்சென்றார்கள். அடித்து, இழுத்து அவரை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்துக்குள் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். 

இந்தச்சம்பவங்களை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த செய்தியாளர்களையும் வீடியோ எடுக்கக்கூடாது என்று தடுத்து, ரசூலின் உறவினர் தகாத வார்த்தைகளால் திட்டி, வீடியோ எடுத்துக்கொண்டடிருந்தவர்களின் செல்போனை பறித்துச்சென்றார்கள். 

மனைவியுடன் வாழமாட்டேன், காதலியுடன்தான் வாழ்வேன் என்று கூறி ரசூல் சாலையில் செய் செய்த அடாவடித்தனங்கள் வாகன ஓட்டிகளை விபத்திற்குள்ளாக்கியிருக்கும்.  

டாபிக்ஸ்