NLC: பாமக போராட்ட அறிவிப்பு எதிரொலி.. கால்வாய் அமைக்கும் பணியை தற்காலிமாக நிறுத்திய என்எல்சி!
Jul 28, 2023, 07:09 AM IST
என்எல்சி நிர்வாகத்தைக் கண்டித்து பாமக தலைவர் அன்பு மணி ராமதாஸ் முற்றுகை போராட்டம் அறிவித்துள்ள நிலையில் இன்று ஒரு நாள் தற்காலிகமாகக் கால்வாய் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வளையமா தேவி கிராமத்தில் கால்வாய் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
என்எல்சி நிர்வாகத்தைக் கண்டித்து பாமக தலைவர் அன்பு மணி ராமதாஸ் முற்றுகை போராட்டம் அறிவித்துள்ள நிலையில் இன்று ஒரு நாள் தற்காலிகமாக கால்வாய் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்திருக்கும் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்துக்காக பணியை என்எல்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணி நேற்று முன் தினம் காலை தொடங்கியது.
சோத்தியாதோப்பு அருகே கத்தாழை, கரிவட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆதனூர் உள்பட பல்வேறு பகுதியில் உள்ள விவசாய நிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளில் ஈடுபட்டனர். அந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலம் கால்வாய் வெட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாம் சுரங்க விரிவாக்கத்துக்காக சுமார் 1500 மீட்டர் நீளம் கால்வாய் வெட்டப்பட்ட உள்ளது.
தற்போது அங்கு பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்கு கூட தயார் ஆகாத நிலையில் பச்சை பயிர்களை அழித்து கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பயிர்களின் அறுவடைக்கு பின் கால்வாய் வெட்ட வேண்டும் எனவும், கையகப்படுத்தும் நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பை கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
இந்நிலையில் என்எல்சிநிர்வாகத்தித் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இன்று பாமக தலைவர் முற்றுகை போராட்டம் அறிவித்துள்ளார். சுற்றுச்சூழல் விவகாரத்தில் ஆர்வம் உள்ள அனைத்து அமைப்புகளும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் 16 பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்த நிலையில் நேற்று இரவு 3 பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இப்படி தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் இன்று தற்காலிகமாக வளையமா தேதி பகுதியில் நடைபெறும் கால்வாய் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
மூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்