தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai: திருமணமான 22 நாளில் பகீர் சம்பவம்..80 சவரன் நகையுடன் புதுமணப்பெண் திடீர் மாயம்..புது மாப்பிள்ளை ஷாக்!

Chennai: திருமணமான 22 நாளில் பகீர் சம்பவம்..80 சவரன் நகையுடன் புதுமணப்பெண் திடீர் மாயம்..புது மாப்பிள்ளை ஷாக்!

Karthikeyan S HT Tamil

Oct 06, 2023, 08:45 AM IST

google News
சென்னையில் கல்லூரிக்கு செல்வதாக கூறி 80 சவரன் நகைகளுடன் புதுமணப் பெண் மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் கல்லூரிக்கு செல்வதாக கூறி 80 சவரன் நகைகளுடன் புதுமணப் பெண் மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் கல்லூரிக்கு செல்வதாக கூறி 80 சவரன் நகைகளுடன் புதுமணப் பெண் மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் திருமணமான 22 நாளில் கல்லூரிக்கு செல்வதாக கூறி 80 சவரன் நகைகளுடன் மாயமான புதுமணப் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ் (26) என்ற இளைஞருக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த சென்னகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஆர்த்தி (22) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த மாதம் 11 ஆம் தேதி கோலாகலமாகா திருமணம் நடைபெற்றது. 

விக்னேஷ் சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஆர்த்தி சேலையூர் அருகே உள்ள கல்லூரியில் எம்.காம் முதலாமாண்டு படித்து வந்தார். திருமணத்தின்போது ஆர்த்திக்கு அவரது பெற்றோர் 80 பவுன் நகை போட்டதாக கூறப்படுகிறது. 22 நாட்கள் திருமண ஜோடிகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில், கல்லூரியில் முதலாம் ஆண்டு கட்டணம் செலுத்தாததால் கல்லூரி நிர்வாகம் ஆர்த்தியிடம் கடிதம் எழுதி கொடுக்குமாறு கேட்டிருக்கிறார்கள். 

இதையடுத்து கடந்த 3 ஆம் தேதி தான் படிக்கும் கல்லூரிக்கு சென்று கடிதம் எழுதி கொடுத்துவிட்டு வருவதாக கணவரிடம் கூறிவிட்டு ஆர்த்தி சென்றுள்ளார். ஆனால், அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதன் பின்னர் கல்லூரிக்கு சென்று விசாரித்த போது அவர் கல்லூரிக்கு வராதது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் வீட்டிற்கு வந்து பார்த்த போது திருமணத்தின் போது போடப்பட்ட நகைகள் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து 80 சவரன் நகைகளுடன் மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இது தொடர்பாக விக்னேஷ் அளித்த புகாரின்பேரில் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான புதுமணப் பெண்ணை தேடி வருகிறார்கள்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், திருமணத்திற்கு முன்பே இளைஞர் ஒருவரை காதலித்ததும், தற்போது அந்த இளைஞரும் தலைமறைவாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காதலருடன் புதுமணப் பெண் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தேடி வருகின்றனர். திருமணமான 22 நாளில் கல்லூரிக்கு செல்வதாக கூறி 80 சவரன் நகைகளுடன் புதுமணப் பெண் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி