தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Nda-வின் முடிவே எனது முடிவு! Ops - Epsக்கு தண்ணீ காட்டும் ஜான் பாண்டியன்!

NDA-வின் முடிவே எனது முடிவு! OPS - EPSக்கு தண்ணீ காட்டும் ஜான் பாண்டியன்!

Kathiravan V HT Tamil

Jan 21, 2023, 08:14 PM IST

google News
’’நான் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளேன். அவர்கள் இன்னும் எந்த முடிவையும் செய்யவில்லை, அவர்கள் முடிவெடுத்த பிறகே என்னுடய முடிவை சொல்ல முடியும்’’
’’நான் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளேன். அவர்கள் இன்னும் எந்த முடிவையும் செய்யவில்லை, அவர்கள் முடிவெடுத்த பிறகே என்னுடய முடிவை சொல்ல முடியும்’’

’’நான் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளேன். அவர்கள் இன்னும் எந்த முடிவையும் செய்யவில்லை, அவர்கள் முடிவெடுத்த பிறகே என்னுடய முடிவை சொல்ல முடியும்’’

காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா மறைவை அடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அத்தொகுதியில் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு மீண்டும் ஒதுக்குவதாக அறிவித்துள்ள நிலையில் அத்தொகுதியில் போட்டியிட ஈவிகேஎஸ் இளங்கோவன் மறுத்துவிடார், மேலும் தனது இளையமகன் சஞ்சய் போட்டியிட கட்சி மேலிடத்தில் பேசி உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

பரப்புரையை தொடங்கிய திமுக கூட்டணி

காங்கிரஸ் கட்சி தரப்பில் இருந்து இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் வீட்டு வசதித்துறை அமைச்சரும் ஈரோடு மாவட்ட செயலாளருமான முத்துசாமி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர்  தலைமையில் கை சின்னத்திற்கு பேரணியாக சென்று வாக்கு கேட்டு திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டன.

கை சின்னத்திற்கு வாக்கு கேட்கும் திமுக அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு

களமிறங்கிய ஓபிஎஸ்

அதிமுகவின் ஈபிஎஸ் தரப்பு தமாக தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஆதரவு கேட்ட நிலையில் அதிமுக நிறுத்தும் வேட்பாளருக்கே தங்கள் ஆதரவை தெரிவிப்பதாக வாசன் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்து, அதிமுகவின் கூட்டணி கட்சிகளான தமாகா, பாஜக, புரட்சி பாரதம், பாமக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளை சந்தித்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு கேட்க உள்ளதாக கூறினார்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலையை சந்தித்து ஈபிஎஸ் ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஆதரவு கேட்டனர்.

பிடிக்கொண்டுக்காத ஜான் பாண்டியன்

சூளைமேட்டில் உள்ள ஜான் பாண்டியன் இல்லத்தில், ஈபிஎஸ் தப்பில் கே.பி.முனுசாமி, வேலுமணி,திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் சென்று இடைத்தேர்தலில் ஆதரவு தருமாறு கேட்டனர். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன், இருவரும் பிரியக்கூடாது என்பதே எங்களின் ஆசை, மக்களின் ஆசை, பாஜக போட்டியிடுவதற்கு வாய்ப்பில்லை, அதிமுகதான் நிற்கும் என்பது என் நம்பிக்கை, எல்லோரும் ஒன்றாக சேர வேண்டும் என சொன்னதற்கு முயற்சி செய்வோம் என்று சொன்னார்கள், இரட்டை இலை எங்கு உள்ளதோ அங்குதான் ஆதரவு கொடுக்க முடியும் என தெரிவித்தார்.

ஜான் பாண்டியனை சந்தித்து ஆதரவு கேட்ட ஓபிஎஸ்

பிற்பகலில் ஜான் பாண்டியனை, ஓ.பன்னீர் செல்வம், வைத்திய லிங்கம், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் சந்தித்து ஜான் பாண்டியனிடம் ஆதரவு கேட்டனர். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன், இடைத்தேர்தல் குறித்து ஆலோசனைதான் போய்க்கொண்டு இருக்கிறதே தவிர இன்னும் முடிவு செய்யவில்லை, நான் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளேன். அவர்கள் இன்னும் எந்த முடிவையும் செய்யவில்லை, அவர்கள் முடிவெடுத்த பிறகே என்னுடய முடிவை சொல்ல முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். ஆதரவுகள் கேட்கப்பட்டுள்ள நிலையில் தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலையையும் சந்தித்து ஜான் பாண்டியன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

இரட்டை இலை முடக்கப்படுமா?

அதிமுக இரண்டாக பிரிந்து, பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் முழு ஆதரவு தங்கள் பக்கமே உள்ளது என்று நிரூபிப்பதற்கான வாய்ப்பாக இந்த இடைத்தேர்தலை எடப்பாடி பழனிசாமி தரப்பு கருதுகிறது.

தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளே தற்போது வரை இருந்து வருவதாக சமீபத்தில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் அனுப்பி இருந்த கடிதத்தின் மூலம் தெரிய வந்துள்ள நிலையில் சின்னத்தை ஒதுக்கீடு செய்யும் ஏ மற்றும் பி-படிவங்களில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் கையெழுத்து இருந்தால் மட்டுமே இரட்டை இலை சின்னம் கிடைக்கும் எனவும், இரண்டு அணிகளில் யாரேனும் ஒருவர் இரட்டை இலையை கேட்டு நீதிமன்றத்தை நாடும் நிலை நேர்தால் மீண்டும் இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் இருப்பதாகவும் கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை