Murasoli Land Case: ’முரசொலி நிலம் வழக்கில் திமுகவுக்கு பின்னடைவு! முழு தீர்ப்பு விவரம் இதோ!
Jan 10, 2024, 10:59 AM IST
”Murasoli Land Case: எல்.முருகன் பதவியில் இருந்தபோது அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டாலும் மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க உத்தரவு”
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள நிலம் தொடர்பான வழக்கை தேசிய பட்டியல் இனத்தோர் ஆணையம் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முரசொலி அறக்கட்டளை அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் பாஜகவை சேர்ந்த சீனிவாசன் என்பவர் இது தொடர்பாக தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தில் புகார் அளித்து இருந்தார்.
இந்த புகார் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி அப்போதைய எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த எல்.முருகன் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
எல்.முருகன் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்க வேண்டும், விசாரணை நடத்த தடைவிக்க வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில், 2019ஆம் ஆண்டு எல்.முருகன் பிறப்பித்த நோட்டீஸை ரத்து செய்ததுடன், புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணையை தொடரலாம் என்றும், இதில் தொடர்புடைய அனைத்து தரப்புக்கும் வாய்ப்பு அளித்து விளக்கங்களை பெற்று உரிய முடிவை எடுக்க வேண்டும் என்று ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
சொத்தின் உரிமைகள் தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையத்திற்கு இல்லை என்றாலும், நிலம் பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக்க அதிகாரம் உள்ளதால் விசாரணைக்கு தடை விதிக்க கூடாது என தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது.
டாபிக்ஸ்