Morning Top 10 News: முதல்வர் தர்மபுரி பயணம் முதல் இந்தோனேசியாவில் கனமழை வரை - இன்றைய டாப் 10 செய்திகள் இதோ..!
Mar 11, 2024, 07:35 AM IST
Morning Top 10 News: முதல்வர் ஸ்டாலின் தர்மபுரி பயணம் முதல் இந்தோனேசியாவில் கனமழை பாதிப்பு வரை இன்றைய டாப் 10 செய்திகளில் இடம்பெற்றுள்ளவை குறித்து பார்ப்போம்.
Morning Top 10 News: முதல்வர் ஸ்டாலின் தர்மபுரி பயணம் முதல் இந்தோனேசியாவில் கனமழை பாதிப்பு வரை இன்றைய டாப் 10 செய்திகளில் இடம்பெற்றுள்ளவை குறித்து பார்ப்போம்.
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தர்மபுரியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் விமான நிலையத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தர்மபுரி அரசு கலைக்கல்லூரிக்கு வந்து அரசு விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவில் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முடிவுற்ற 993 திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார்.
- மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜகவுடன் நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
- டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வரும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 96ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரம், சிறந்த ப்ரோடக்ஷன் டிசைன், சிறந்த ப்ரோடக்ஷன் டிசைனுக்கான 3 ஆஸ்கர் விருதை "புவர் திங்க்ஸ்" திரைப்படம் வென்றுள்ளது. 'ஓப்பன்ஹெய்மர்' படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார் ராபர்ட் டௌனி ஜூனியர். The Holdovers படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதைப் டாவின் ஜாய் ரண்டோல்ஃப் வென்றுள்ளார்.
- புதிதாக இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமிப்பது குறித்து வரும் 15ஆம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார். பிரதமர், அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இணைந்து புதிய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
- சென்னையில் 660-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன்படி, இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
- குவைத், கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்குகிறது. இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் நாளை நோன்பு தொடங்குகிறது.
- சென்னையில் இன்று தமிழக பாஜக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளது.
- டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள துவாரகா விரைவுச்சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். 29 கி.மீ தூரத்திற்கான நாட்டின் முதல் எட்டு வழிச்சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
- இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பெசிசிர் செலாட்டான், படாங் பரிமான் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் அங்கு வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இந்தோனேசியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், 19 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும், 700-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 80 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்