தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ’முதுகலை நீட் தேர்வு ரத்து முதல் அண்ணாமலை மீதான ஆர்.எஸ்.பாரதி புகார் வரை!’ இன்றைய டாப் 10 செய்திகள்!

Top 10 News: ’முதுகலை நீட் தேர்வு ரத்து முதல் அண்ணாமலை மீதான ஆர்.எஸ்.பாரதி புகார் வரை!’ இன்றைய டாப் 10 செய்திகள்!

Kathiravan V HT Tamil

Jun 23, 2024, 12:15 PM IST

google News
Top 10 News: இன்று நடைபெற இருந்த நீட் முதுகலை தேர்வுகள் ரத்து முதல் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தில் ஆளுநரை சந்திக்கும் அண்ணாமலை வரை இன்றைய டாப் 10 செய்திகள் இதோ!
Top 10 News: இன்று நடைபெற இருந்த நீட் முதுகலை தேர்வுகள் ரத்து முதல் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தில் ஆளுநரை சந்திக்கும் அண்ணாமலை வரை இன்றைய டாப் 10 செய்திகள் இதோ!

Top 10 News: இன்று நடைபெற இருந்த நீட் முதுகலை தேர்வுகள் ரத்து முதல் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தில் ஆளுநரை சந்திக்கும் அண்ணாமலை வரை இன்றைய டாப் 10 செய்திகள் இதோ!

  1. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. 
  2. தேசிய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட மத்திய அரசு, தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) தலைவர் சுபோத் சிங்கைப் பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. கல்வி அமைச்சகம், இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே ராதாகிருஷ்ணன் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்து, ஏஜென்சியின் செயல்பாட்டை மறுஆய்வு செய்யவும், தேர்வு சீர்திருத்தங்களை பரிந்துரை செய்யவும் உத்தரவு.
  3. மருத்துவ முதுகலை படிப்புகளுக்காக இன்று நடைபெற இருந்த நீட் முதுகலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவிப்பு. 
  4. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக கிராமம் கிராமாக சென்று ஆய்வு செய்ய உள்ளதாகவும், கள்ளச்சாராயம் இல்லாத மாவட்டமாக கள்ளக்குறிச்சியை உருவாக்குவோம் என்றும் ரஜத் சதுர்வேதி தெரிவித்து உள்ளார். 
  5. கள்ளச்சாராயம் காய்ச்சும் நபர்கள் உடன் திமுகவுக்கு தொடர்பு உள்ளது. இது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் நாளை நேரில் புகார் அளிக்க உள்ளோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி.
  6. கருணாபுரம் சம்பவம் அண்ணாமலையில் சதித்திட்டம் என நான் சந்தேகப்படுகின்றேன். இந்த விவகாரத்தில் பாஜக ஆளும் கட்சியாக உள்ள பாண்டிச்சேரியில் இருந்து பொருட்கள் வந்து உள்ளன. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை சீர்குலைக்க இப்படி செய்கிறார் என்று நான் குற்றம்சாட்டுகின்றேன் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி.
  7. மதுரை உயர்நீதிமன்ற கிளையின்  தீர்ப்பு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் பாசன மேலாண்மை சட்டம் 2000-இன் படி இனிவரும் நாட்களில் ஏலம் நடத்தாமல், ஏரிகளில் மீன்பாசி குத்தகை தர முடியாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு.
  8. சாலைகளில் சுற்றித்திரிந்து பிடிபடும் கால்நடைகளுக்கு முதல் இரண்டு முறை அபராதமும், மூன்றாவது முறை பிடிப்பட்டால் ஏலம் விடுவதற்கான சட்டமும் விரைவில் கொண்டுவரப்படும் என்று நகர்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல்கள் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு.
  9. கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்திய பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளதாக திமுக எம்.எல்.ஏக்கள் உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் பேட்டி. 
  10. அமெரிக்காவில் நடந்து வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளுக்கு நாள் முக்கியத்துவம் பெற்று வருகின்றது. தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி வெற்றிகளை குவித்து வருகின்றது. அந்த அடிப்படையில், வங்கதேசம் அணியுடன் நடைபெற்ற போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் அந்நாட்டை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்று உள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-

https://twitter.com/httamilnews

Google News: https://bit.ly/3onGqm9 

இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி