Modi Meditation: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்யும் பிரதமர்.. அடுத்த 3 நாட்கள் தியானம்!
May 30, 2024, 06:04 PM IST
Modi Meditation: திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாக்குமரி வந்த மோடி விருந்தினர் மாளிகைக்கு சென்றார். தற்போது அங்கிருந்து கார் மூலம் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். பகவதி அம்மன் கோவிவிலில் பிரதமர் சிறப்பு தரிசனம் மேற்கொண்ட அவர் விவேகானந்தர் பாறைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
Modi Meditation: மக்களவை தேர்தலுக்கான இறுதிகக்கட்ட பிரச்சாரம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது தியானம் மேற்கொள்ள திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்தார். இன்று முதல் ஜூன் 1ம் தேதி வரை மோடி கன்னியாக்குமரியில் தங்கி தியானம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் தரிசனம்
திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாக்குமரி வந்த மோடி விருந்தினர் மாளிகைக்கு சென்றார். தற்போது அங்கிருந்து கார் மூலம் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். பகவதி அம்மன் கோவிவிலில் பிரதமர் சிறப்பு தரிசனம் மேற்கொண்ட அவர் விவேகானந்தர் பாறைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். பிரதமர் வருகையை யொட்டி பகவதி அம்மன் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் விவேகானந்தர் பாறைக்கு செல்ல பிரத்தேக படகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
7ஆம் கட்ட தேர்தலும் மோடியின் தியானமும்
நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து உள்ள நிலையில் வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி அன்று கிழக்கு, மேற்கு, இந்தியாவில் உள்ள 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 30ஆம் தேதி (இன்று)மாலை உடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவடைகிறது. பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில், மே 30ஆம் தேதி முதல் 3 நாட்கள் தியானத்தில் ஈடுபட உள்ளார்.
மக்களவை தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் பிரதமர் மோடி தியானம் செய்வதற்கு தமிழகத்தின் ஆளும் கட்சியாக திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது அரசியல் நிகழ்வு அல்ல
தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்ட முடிவுக்கு பிறகு கன்னியாகுமரிக்கு அவர் செல்வது ஆன்மிக பயணமாக இருக்கும் என்பதால் அரசியல் நிகழ்வுகள் எதுவும் நடைபெறாது.
திருவள்ளுவர் சிலை அருகே அமைந்து உள்ள விவேகாந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில்தான் சுவாமி விவேகானதர் தியானம் செய்து உள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, உத்ராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் காவி உடை அணிந்து பிரதமர் நரேந்திர மோடி தியானம் மேற்கொண்டார்.
கன்னியாகுமரியின் விவேகானந்தர் பாறையின் முக்கியத்துவம்
விவேகானந்தர் பாறை என்பது இந்தியாவின் தென் முனையான கன்னியாகுமரியின் வாவத்துறை கடற்கரையிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவாகும். இது 15 நிமிட படகு சவாரி மூலம் பொதுமக்களுக்கு அணுகக்கூடியது.
1892 ஆம் ஆண்டில், இந்து தத்துவஞானி சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து பாறைகள் நிறைந்த தீவுக்கு தியானம் செய்வதற்காக நீந்தினார். விவேகானந்தர் மூன்று பகல் மூன்று இரவுகள் அந்தத் தீவில் தியானம் செய்து ஞானம் பெற்றார் என்று அவரது சீடர்கள் நம்பினர். நான்கு ஆண்டுகள் நாடு முழுவதும் பயணம் செய்து தனது தியானத்தைத் தொடங்கிய அவர், இறுதியாக கன்னியாகுமரியில் தனது தத்துவத்தை உருவாக்கினார்.
விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தியானம் செய்வது ஏன்?
சுவாமி விவேகானந்தர் தனக்கு ரோல் மாடல் என்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார். சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் என்ற தொண்டு அமைப்பின் 125 வது ஆண்டு விழாவிலும் பிரதமர் உரையாற்றினார்.
பிரதமர் மோடி தமிழகத்தில் பாஜக பிரச்சாரத்தை நிறுத்தியதற்கு மற்றொரு காரணம் இந்த தேர்தல் சீசனில் கட்சியின் முக்கிய தென்னிந்திய உந்துதலாக இருக்கலாம். பிரதமர் மோடி 2024 ஆம் ஆண்டில் மட்டும் ஏழு முறை தமிழ்நாட்டிற்கு விஜயம் செய்தார், கடந்த மூன்று ஆண்டுகளில் தென் மாநிலங்களுக்கான அவரது பயணங்களில் மூன்றில் ஒரு பங்கு நடந்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தென்னிந்தியாவில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது நம்பிக்கை தெரிவித்தார். இந்த மாத தொடக்கத்தில் பி.டி.ஐ.க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய பிரதமர், "நாங்கள் ஏற்கனவே மனப் பகிர்வில் ஒரு முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம், பிராந்தியத்தில் எங்களுக்கு தொகுதி பங்கு மற்றும் வாக்கு சதவீதத்தில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் காண்போம்" என்று கூறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்