தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mnm : பிஞ்சுக் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கலாமா? - மநீம கேள்வி

MNM : பிஞ்சுக் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கலாமா? - மநீம கேள்வி

Divya Sekar HT Tamil

Sep 26, 2022, 05:06 PM IST

google News
சாதி பேதங்களை ஏற்படுத்தும் வகையிலான பாடத்தைக் கற்றுத் தருவது கடும் கண்டனத்துக்குரியது என்று மநீம தெரிவித்துள்ளது.
சாதி பேதங்களை ஏற்படுத்தும் வகையிலான பாடத்தைக் கற்றுத் தருவது கடும் கண்டனத்துக்குரியது என்று மநீம தெரிவித்துள்ளது.

சாதி பேதங்களை ஏற்படுத்தும் வகையிலான பாடத்தைக் கற்றுத் தருவது கடும் கண்டனத்துக்குரியது என்று மநீம தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 6-ம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடத்தில், சாதி பேதத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தும் வர்ணாசிரமம் தொடர்பான பாடம் இடம் பெற்றுள்ளது பெரிதும் அதிர்ச்சி அளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தனது டுவிட்டர் பக்கத்தில், "மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 6-ம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடத்தில், சாதி பேதத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தும் வர்ணாசிரமம் தொடர்பான பாடம் இடம் பெற்றுள்ளது பெரிதும் அதிர்ச்சி அளிக்கிறது. 

அப்பாடத்தில் இடம்பெற்றுள்ள படங்கள் வேதனையை திகரிக்கின்றன. "வர்ணாசிரம முறை" என்ற தலைப்பிலான அந்தப் பாடத்தில் பிராமணர்கள், சத்ரியர்கள், வைஸ்யர்கள், சூத்திரர்கள் எனக் குறிப்பிடப்பட்டு, ஒவ்வொருவருக்குமான வேலைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதுகுறித்த கேள்விகளும் உள்ளன.

பிஞ்சுக் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் இப்பாடம் அமைந்துள்ளது. பேதமற்ற சமுதாயம் அவசியம் என்று கற்றுக்கொடுக்க வேண்டிய பள்ளியில், மனிதர்களிடம் சாதி பேதங்களை ஏற்படுத்தும் வகையிலான பாடத்தைக் கற்றுத் தருவது கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக அந்தப் பாடத்தை அகற்ற வேண்டும் என்று சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி