தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  நாங்குநேரி சம்பவம்..இது போன்ற அநீதி இனி நடவாமல் தடுப்போம் - மநீம கண்டனம்

நாங்குநேரி சம்பவம்..இது போன்ற அநீதி இனி நடவாமல் தடுப்போம் - மநீம கண்டனம்

Karthikeyan S HT Tamil

Aug 16, 2023, 12:32 PM IST

Nanguneri Incident: பிறப்பினால் மனிதர்கள் அனைவரும் சமம்; மனிதர்களிடையே பாகுபாடு கடைபிடிப்பது இழிவானது எனும் சமூகப்பாடம்தான் முதன்மையாக கற்றுக்கொடுக்கப்பட வேண்டியது என்று மக்கள் நீதிமய்யம் தெரிவித்துள்ளது.
Nanguneri Incident: பிறப்பினால் மனிதர்கள் அனைவரும் சமம்; மனிதர்களிடையே பாகுபாடு கடைபிடிப்பது இழிவானது எனும் சமூகப்பாடம்தான் முதன்மையாக கற்றுக்கொடுக்கப்பட வேண்டியது என்று மக்கள் நீதிமய்யம் தெரிவித்துள்ளது.

Nanguneri Incident: பிறப்பினால் மனிதர்கள் அனைவரும் சமம்; மனிதர்களிடையே பாகுபாடு கடைபிடிப்பது இழிவானது எனும் சமூகப்பாடம்தான் முதன்மையாக கற்றுக்கொடுக்கப்பட வேண்டியது என்று மக்கள் நீதிமய்யம் தெரிவித்துள்ளது.

நாங்குநேரி சம்பவம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் இன்று (ஆக.16) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நாங்குனேரியில் சாதிய வன்மம் ஊட்டப்பட்ட மாணவர்கள் செய்த கொடுஞ்செயலுக்கு ஆளான தம்பி சின்னதுரைக்கும், அவரது சகோதரிக்கும் ஆறுதல் சொல்ல உலகின் எந்த மொழியிலும் வார்த்தை இல்லை. அவர் சிந்திய ரத்தம், தமிழ்நாட்டில் பிஞ்சு மனங்களில் கூட சாதி வெறி வேரூன்றியுள்ளதை வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறது. தம்பி சின்னதுரையும், அவரது சகோதரியும் விரைவில் மீண்டெழுந்து வரவேண்டும். பாடசாலைக்கு தலை நிமிர்ந்த படி சென்று சிறப்பாகக் கல்வி கற்று மாபெரும் வெற்றியாளர்களாக திகழவேண்டும்.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Today Gold Rate: வரலாற்றில் புதிய உச்சம்..வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!

Weather Update: மிரட்ட காத்திருக்கும் கனமழை..இந்த 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

Schools Open: ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக தகவல்

அண்ணல் அம்பேத்கர் அவர்களும் கல்வி கற்கும்போது இதுபோன்ற கொடுமைகளை எதிர்கொண்டு பின்னர் மிகப்பெரிய உலகம் போற்றும் கல்வியாளராக ஆனார். அவரைப் போலவே இங்கே கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இக் குழந்தைகள் உலகம் போற்றும் அளவிற்கு கல்வியாளராக வேண்டும். சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக அம்பேத்கரும், காந்தியும், பெரியாரும், நாராயண குருவும் இன்ன பிற தலைவர்களும் முன்னெடுத்த போரை நாம் அதே உக்கிரத்துடன் மீண்டும் தொடங்கியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நாங்குனேரி விவகாரத்தின் தீவிரத்தன்மையை உணர்ந்து தமிழ்நாடு அரசு எடுத்த உடனடி நடவடிக்கைகள் ஆறுதல் அளிக்கின்றன.

பள்ளிகளில் பற்பல பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. பிறப்பினால் மனிதர்கள் அனைவரும் சமம்; மனிதர்களிடையே பாகுபாடு கடைபிடிப்பது இழிவானது எனும் சமூகப்பாடம்தான் முதன்மையாக கற்றுக்கொடுக்கப்பட வேண்டியது. பள்ளி மாணவர்கள் சாதி அடையாளக் கயிறு கட்டுவதும், தங்களது வாகனங்களில் சாதிப்பெயரை எழுதி வைத்துக்கொள்வதும், ஒரே சாதி மாணவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து சக மாணவர்களையே தாக்குவதும், போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதும் பல கல்விக்கூடங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்பது கசப்பான உண்மை. இந்நிலை மாற அரசும், அதிகாரிகளும், கல்வி நிறுவனங்களும், பெற்றோரும், மாணவர்களும் ஒத்திசைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் முற்போக்குச் சிந்தனையாளர்கள், அறிஞர்கள், கலைஞர்களை அழைத்து வந்து மாணவர்களிடம் உரையாடச் செய்யவேண்டும். சமூகநீதி தனிப்பாடப் பிரிவாக கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். மாணவர்களிடையே சமத்துவத்தை வளர்க்கக் கூடிய நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டு பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும். சாதிய பாகுபாடுகள் அதிகம் இருக்கும் பள்ளிகளில் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு சமூக ஆர்வலரை வழிகாட்டியாக (mentor) ஒருவரை பொறுப்பெடுக்கச் செய்யலாம். பொதுவெளியில், சமூக ஊடகங்களில் சாதிய வேறுபாட்டையும், வன்மத்தையும் விதைப்போர் மீது கடுமையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்பட வேண்டும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி