தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Senthil Balaji: 'ஷேவிங் செய்யாத முகம்' சிறையில் செந்தில் பாலாஜியை அவசரமாக அழைத்து சென்ற Ed

Senthil Balaji: 'ஷேவிங் செய்யாத முகம்' சிறையில் செந்தில் பாலாஜியை அவசரமாக அழைத்து சென்ற ED

Kathiravan V HT Tamil

Aug 07, 2023, 08:50 PM IST

google News
”உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 5 நாட்கள் விசாரணைக்காக அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பதாகவும், அவரை வரும் 12ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் நீதிபதி உத்தரவு”
”உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 5 நாட்கள் விசாரணைக்காக அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பதாகவும், அவரை வரும் 12ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் நீதிபதி உத்தரவு”

”உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 5 நாட்கள் விசாரணைக்காக அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பதாகவும், அவரை வரும் 12ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் நீதிபதி உத்தரவு”

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணை செய்வதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து அழைத்து சென்றனர். 

சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையிலும் பின்னர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் கடந்த மாதம் இறுதியில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் சட்டவிரோதமாக கைது செய்து உள்ளதாக கோரி அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

அதில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சரியான நடைமுறை என்றும் அவரை 5 நாட்களுக்கு அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையெடுத்து புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது புழல் சிறை மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவர் ஆஜரானதை பதிவு செய்து கொண்ட நீதிபதி அல்லி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 5 நாட்கள் விசாரணைக்காக அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பதாகவும், அவரை வரும் 12ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதனையெடுத்து புழல் சிறைக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவு நகலை சிறைத்துறை அதிகாரிகளிடம் காண்பித்த பின்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்து சென்றனர். 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி