Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஆட்கொணர்வு மனு இன்று விசாரணை!
Jul 11, 2023, 07:16 PM IST
செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள நீதிமன்ற காவல் நாளையுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில் இன்று ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் இரண்டு நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்பு அளித்ததால் அது 3ஆவது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இன்று நீதிமன்ற விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் வழக்கு விசாரணை தொடங்கிய போது அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜென்ரல் துஷார் மேத்தா காணலி மூலமும் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நேரிலும் வாதங்களை முன் வைத்தனர்.
நீதிமன்ற காவலில் வைத்த பிறகு ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா, காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா?, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியுமா இல்லையா என்ற அடிப்படையில் நீதிபதி தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்க சொல்லியதுடன், இரண்டு நீதிபதி அமர்வு முன்னர் வைத்த வாதங்களை மீறி எந்த வாதங்களையும் முன் வைக்க கூடாது என்றும் நீதிபதி கார்த்திகேயன் கூறி இருந்தார்.
வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நாளை விசாரிக்க உள்ளதாக நீதிபதி கூறிய நிலையில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் நேரில் வர உள்ளதால் வழக்கு விசாரணையை வரும் ஜூலை 11ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று ஒத்திவைக்க செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா. வரும் ஜூலை 11ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வில் முக்கிய வழக்குகள் உள்ளதால் அதில் கட்டாயம் தான் இருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் எனவே நாளை விசாரணை தொடங்க வேண்டும் என்றும் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.
இருதரப்பு கோரிக்கைகளையுக் கேட்ட நீதிபதி கார்த்திகேயன், வரும் ஜூலை 11ஆம் தேதி காலை செந்தில் பாலாஜி தரப்பு வாதங்களை தொடங்கவும் பிற்பகலில் அமலாக்கத்துறை சார்பில் வாதங்களை சொலிசிட்டர் ஜென்ரல் துஷார் மேத்தா காணொலி மூலம் வாதங்களை வைக்கவும் தேவைப்பட்டால் நேரில் ஆஜராகி வாதாடும் வகையில் ஜூலை 12ஆம் தேதியும் வாதங்களை எடுத்து கொள்ளலாம் என்று கூறி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். இந்நிலையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வர உள்ளது.
இதற்கிடையில் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள நீதிமன்ற காவல் நாளையுடன் முடிவுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்