தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Minister Senthil Balaji: சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ்..மீண்டும் புழல் சிறைக்கு திரும்பிய செந்தில் பாலாஜி!

Minister Senthil Balaji: சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ்..மீண்டும் புழல் சிறைக்கு திரும்பிய செந்தில் பாலாஜி!

Karthikeyan S HT Tamil

Dec 07, 2023, 08:12 AM IST

google News
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணை முடிந்த பிறகு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

அதன்பிறகான நீதிமன்றக் காவல் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தினர். இதைத் தொடர்ந்து, அவரது நீதிமன்ற காவலை நவம்பர் 22 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதல்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொண்ட சிறப்பு மருத்துவக் குழு, தேவையான சிகிச்சைகளை வழங்கி வந்தது.

இந்நிலையல், சிகிச்சை முடிந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நலம் சற்று தேறியதாக தெரிகிறது. இதனையடுத்து இன்று (டிச.07) காலை 6.30 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி அவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப் பத்திரிகை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்தையினர் தாக்கல் செய்தனர். இதையடுத்து டிசம்பர் 15 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இலாக்கா இல்லாத அமைச்சராக தொடரும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 12 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை