Liqer Death: ’எல்லா மாவட்டங்களிலும் இது ஜென்ரலாக நடப்பதுதான்; ஆனால்…!’ கள்ளச்சாராய மரணம் குறித்து பொன்முடி பேட்டி
May 16, 2023, 08:37 PM IST
இதுபோன்ற செயல்கள் இனி நடக்காமல் தடுப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதனை நிச்சயமாக செய்வோம் - பொன்முடி
விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சந்தித்து தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரணங்களை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, எல்லோரையும் கைது செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஆணையிட்டு அந்த பணிகள் நடக்கிறது. எல்லா மாவட்டங்களிலும் இது ஜென்ரலாக நடப்பதுதான், இதெல்லாம் சொல்வதால் நியாயப்படுத்துகிறேன் என்று கிடையாது; தவறு தவறுதான்.
ஆனால் தவறு செய்பவர்களை உடனடியாக காவல்துறை மூலம் நடவடிக்கை வேண்டும் என்பதால் முதலமைச்சர் வந்துள்ளார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட உடனே அமைச்சர்கள் எங்களை அனுப்பினார். அவரும் நேற்று வந்து பார்த்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையிட்டு சென்றுள்ளார். உயர்க்காவல்துறை அதிகாரிகளையும் முதல்வர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
13 வீடுகளுக்கும் சென்று நிவாரணம் அளித்துள்ளோம். அவர்களிடமும் அடுத்த தலைமுறையும் போதைக்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்ற அன்பான வேண்டுகோளை வைத்தோம். இதனை அரசியலாக்க வேண்டும் என்ற எண்ணம், முதலமைச்சருக்கும் எங்களுக்கும் கிடையாது. கள்ளச்சாராய விற்பனை தடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.
இதுபோன்ற செயல்கள் இனி நடக்காமல் தடுப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதனை நிச்சயமாக செய்வோம்.