தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’7000 டன் நெல் காணாமல் போன விவகாரம்! உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட வேண்டாம்’ அமைச்சர் சக்ரபாணி எச்சரிக்கை

’7000 டன் நெல் காணாமல் போன விவகாரம்! உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட வேண்டாம்’ அமைச்சர் சக்ரபாணி எச்சரிக்கை

Kathiravan V HT Tamil

Jun 01, 2023, 09:44 PM IST

google News
தேவையற்ற உண்மைக்கு மாறானவற்றை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நம் முதல்வர் அவர்கள் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்காது
தேவையற்ற உண்மைக்கு மாறானவற்றை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நம் முதல்வர் அவர்கள் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்காது

தேவையற்ற உண்மைக்கு மாறானவற்றை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நம் முதல்வர் அவர்கள் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்காது

தர்மபுரி மாவட்டம், வெற்றிலைக்காரன்பள்ளம் கிடங்கில் நெல் இருப்பு வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்  அர. சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி மாவட்டத்தில் வெற்றிலைக்காரன்பள்ளம் கிடங்கில் 22273 மெட்ரிக் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. அதில் 7174 மெட்ரிக் டன் அரவைக்கு அனுப்பியது போக 15099 மெட்ரிக்டன் இருந்த நிலையில் 7000 டன் இருப்பில் இல்லை என்று கேள்விக்குறியுடன் செய்தி வந்ததைப் பார்த்தவுடனே, தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவரையும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குநரையும் அந்தக் கிடங்கில் 100% தணிக்கை செய்து உண்மைத்தன்மையை அறிய ஏற்பாடு செய்திட ஆணையிட்ட பின் மாவட்ட ஆட்சித் தலைவரும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக விழிப்புப்பணிக் குழுவினரும் ஆய்வு செய்து அது போன்று ஏதுமில்லை என்று நேற்று செய்தியாளர்களை அழைத்துக் கூறினர்.

தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அளித்த விளக்கம் இன்று செய்தித்தாள்களில் விரிவாக வந்த பின்னும் சிலர் தேவையில்லாமல் அது பற்றி உண்மைக்குப் புறம்பாக செய்தி பரப்பி வருகின்றனர். நேற்று 1596 மெட்ரிக் டன் நெல்லும் இன்று 1789 மெட்ரிக் டன் நெல்லும் அரவை ஆலைக்கு அனுப்பப்பட்டுத் தொடர்ந்து தலைமை அலுவலகக் குழுவினர் ஆய்வு செய்ததில் அந்தக் கிடங்கிலிருந்த நெல் அட்டிகளில் மாறுபாடு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் தேவையற்ற உண்மைக்கு மாறானவற்றை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நம் முதல்வர் அவர்கள் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்பதையும் புரிந்து கொண்டு, பொது விநியோகத் திட்ட அங்காடிகளில் தரமான அரிசி வழங்க உறுதி செய்த நம் அரசைப் பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி