தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  No Holiday : பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

No Holiday : பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

Divya Sekar HT Tamil

Jan 16, 2023, 03:10 PM IST

google News
தமிழ்நாட்டில் வரும் ஜனவரி 18 ஆம் தேதி பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் ஜனவரி 18 ஆம் தேதி பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் ஜனவரி 18 ஆம் தேதி பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தீபாவளி பொங்கல் போன்ற முக்கியமான பண்டிகையின் போது வெளியூரில் இருக்கும் மக்கள் அனைவரும் சொந்த ஊர் சென்று திரும்பும் வகையில் கூடுதல் விடுமுறை அளிப்பது வழக்கம். இந்நிலையில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடவிற்கும் நிலையில் 14ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை அரசு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை வழங்கி, வரும் 18 ஆம் தேதி மீண்டும் பள்ளி , கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள் 4 நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோாிக்கை விடுத்திருந்ததால், அதனை கருத்தில் கொண்டு ஜனவரி 18ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.

இந்நிலையில், இன்று நந்தனம் ஒய்.எம்.சி. திடலில் 2023 சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சர்வதேச புத்தக கண்காட்சி இன்று முதல் வரும் 18-ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. சர்வதேச புத்தக கண்காட்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்ட்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். அதன்படி சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கி இருக்கிறது. இதில் எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

3 நாள் நடைபெறுவதில் பங்கேற்க முடியாத வெளிநாட்டு பதிப்பாளர்கள் கூட வீடியோ கான்பரன்சிங் மூலமாக கூட இணையலாம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தின் 30 புத்தகங்கள் வெளிநாட்டு மொழிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். அதேபோல் தமிழக பதிப்பாளர்கள் வெளிநாட்டிற்கு செல்லவும் எதிர்காலத்தில் அரசு திட்டமிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழகத்தில் புதன்கிழமையன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஜனவரி 18ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். பொங்கலுக்கு பின் புதன்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து அரசு முடிவெடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை