தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Anbil Mahesh: லால்குடி நூலகத்தில் மெய்நிகர் நூலக செயல்பாடு - அமைச்சர் தொடக்கம்

Anbil Mahesh: லால்குடி நூலகத்தில் மெய்நிகர் நூலக செயல்பாடு - அமைச்சர் தொடக்கம்

Oct 29, 2022, 04:57 PM IST

google News
லால்குடி கிளை நூலகத்தில் மெய்நிகர் நூலக செயல்பாடுகளை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார்.
லால்குடி கிளை நூலகத்தில் மெய்நிகர் நூலக செயல்பாடுகளை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார்.

லால்குடி கிளை நூலகத்தில் மெய்நிகர் நூலக செயல்பாடுகளை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ல அரசு கிளை நூலகத்தில், மெய்நிகர் நூலகத்தின் செயல்பாடுகளை தமிழக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின்போது நூலகத்தில் பணிபுரிந்து பணியின்போது உயிரிழந்த மூன்று நூலகர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் லால்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சௌந்தர பாண்டியன், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக திருச்சியில் வைத்த செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்ச அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அப்போது அவர் கூறியதாவது: "இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு, 34 லட்சம் குழந்தைகளுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் மையங்கள் தேவைப்பட்டன.

ஒரு மையத்தில் 20 குழந்தைகள் என்ற விதத்தில் இதை திட்டமிட்டோம் . இந்த திட்டம் செயல்படுத்தி ஒரு வருடம் ஆவதால் முன் அறிவிப்பு இல்லாமல் குன்னூரில் ஒரு பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினேன்.

20 பேருக்கு ஒரு தன்னார்வலர் பாடம் எடுத்து கொண்டு இருந்தார். அப்போது இந்த திட்டம் வெற்றி பெற்றிருப்பதை நான் உணர்ந்தேன். இன்னும் கொஞ்சம் காலம் இந்த திட்டம் செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும்"

இவ்வாறு அவர் கூறினார்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி