Anbil Mahesh admitted Hospital:அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி!
Sep 27, 2022, 12:50 PM IST
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை : தமிழகம் முழுவதும் இன்ஃபுளுயன்சா காய்ச்சால் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் குறிப்பாக குழந்தைகளை தாக்கி வருகிறது. இந்த காய்ச்சலால் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. இதனையடுத்து இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக தமிழத்தில் 6,000க்கும் மேற்பட்ட சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் இரண்டு நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாபிக்ஸ்